Close
ஏப்ரல் 5, 2025 11:49 மணி

திருவொற்றியூரில் பாஜக சார்பில் சமத்துவ பொங்கல் விழா

சென்னை

பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை சமத்துவ பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது

பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை சமத்துவ பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்த பொங்கல் விழாவில் பெண்கள் வண்ண கோலமிட்டனர் சிலம்பாட்டம், உறி அடிக்கும் போட்டி மற்றும் கயிறு இழுக்கும் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர்.

போட்டிகளில் வென்றவர்களுக்கு முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு ஆகியவற்றை துணைத் தலைவர் திருமுருகன்  வழங்கினார்.

பின்னர் மாட்டு வண்டியில் கரும்புகள் கட்டி அலங்கரித்து  தெருக்களில் ஊர்வலமாக வலம் வந்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் எம்.மணிகண்டன் நலத்திட்ட பிரிவு தலைவர் கதிர்வேல், பொதுச் செயலாளர் ஜெகதீஷ் மற்றும் செயலாளர் வினோத் குமார்,
திருவொற்றியூர் மேற்கு மண்டல தலைவர் பாலு மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ணகுமார், பொதுச் செயலாளர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top