சென்னை மணலி புதுநகரில் அமைந்துள்ள குழந்தை இயேசு ஆலயத்தின் 43 -ஆவது ஆண்டு பெருவிழாவினையொட்டி சனிக்கிழமை தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர்.
சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள குழந்தை இயேசு ஆலயம் தொடங்கப்பட்டு 43 வது ஆண்டை குறிக்கும் விதமாக ஆண்டு பெருவிழா கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மறை மாவட்ட பேராயர் லாரன்ஸ் பயஸ் கலந்துகொண்டு கொடியேற்ற நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
தினந்தோறும் முக்கிய தேவாலயங்களை பொறுப்பேற்று நடத்தும் பேராயர்கள் வெவ்வேறு தலைப்புகளில் சிறப்பு அருளுரை நிகழ்த்தும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக சனிக்கிழமை இரவு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிர்வாத பெருவிழா நிகழ்ச்சியையடுத்து கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுற்றது.