குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென தமுஎகச வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையை அடுத்த இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீருக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த கயவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக் குழுக்கூட்டம் மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது.
நடைபெற்ற வேலைகள் குறித்து மாவட்டச் செயலாளர் எம்.ஸ்டாலின் சரவணன் பேசினார். கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் இரா.தனிக்கொடி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் கி ஜெயபாலன் நன்றி கூறினார்.
புதுக்கோட்டையை அடுத்த இறையூர் வேங்கையர் வயல் கிராமத்தில் சில கயவர்கள் பட்டியலிட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித மலத்தைக் கலந்துள்ளனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தொடர்ந்து இறையூர் கிராமத்தில் தீண்டாமையை கடைபிடித்த இருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுகிறது.
அதே நேரத்தில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித மலத்தைக் கலந்த சம்பவம் நடந்து 10 நாட்களுக்கும் மேலாக்கியும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
உலகத்திலேயே மிக திறமையான காவல்துறையாக கருதப்படுகின்ற தமிழ்நாடு காவல்துறை சம்பவம் நடந்து இத்தனை நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்பது அதிர்ச்சியையும் வேதனை யையும் ஏற்படுத்துகிறது. இது தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் சமூக விரோதிகளால் விடப்பட்ட சவாலாகவே கருதப்படுகிறது.
எனவே தமிழ்நாடு அரசும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாக மும், காவல்துறையும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர் களை உடனடியாக கைது செய்து நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் கள் சங்க புதுக்கோட்டை மாவட்ட குழு வலியுறுத்து கிறது என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.