Close
செப்டம்பர் 20, 2024 4:02 காலை

அடிப்படை பணிகளுக்கு அயல்பணி முறையை கைவிடக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சியருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு சங்கத்தினர்

அடிப்படை பணிகளுக்கு அயல் பணி முறையில் ஆட்கள் எடுப்பதை கைவிடக் கோரி  சிஐடியு  சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூய்மைப்பணி உள்ளிட்ட அடிப்படைப் பணிகளுக்கு  அயல் பணி (அவுட் சோர்சிங்) முறையில் ஆட்களை எடுக்கக்கூடாது என வலியுறுத்தி புதுக்கோட்டையில்  சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் க.முகமதலிஜின்னா தலைமை வகித்தார்.

கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், துணைச் செயலாளர் சி.மாரிக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் எஸ்.யாசிந்த், அ.முத்தையா, க.ரெத்தினவேல், வி.சி.மாணிக்கம் உள்ளிட்டோர் பேசினர்.

தூய்மைப்பணி உள்ளிட்ட அடிப்படைப் பணிகளுக்கு  அயல் பணி (அவுட் சோர்சிங்) முறையில் ஆட்களை எடுக்கக்கூடாது. பேரூராட்சி தூய்மைப்பணி உள்ளிட்ட அடிப்டைப்படை பணிகளை தனியார் மயமாக்கும் அரசாணை எண்:139-ஐ திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ட ஊதிய அரசாணை யை அமல்படுத்த வேண்டும். அரசு அறிவித்தபடி முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top