Close
நவம்பர் 22, 2024 10:09 மணி

ரூ.70 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு மாநகராட்சி மண்டல குழு கூட்டத்தில் ஒப்புதல்

சென்னை

திட்டப்பணிகளுக்கு சென்னை மாநகராட்சி மண்டலக்குழுக்கூட்டத்தில் ஒப்புதல்

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.70லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு திட்ட பணிகளுக்கு மண்டல குழு கூட்டத்தில்   ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம் மண்டல குழு தலைவர் தி. மு. தனியரசு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஜோதி நகர் பகுதியில் ரூ.25 லட்சம் செலவில் விளையாட்டுத் திடல் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள சென்னை பள்ளிக்கு ரூ. 4 லட்சம் செலவில் கணிப்பொறி வழங்குதல், கத்திவாக்கம் பகுதியில் ரூ.8 லட்சம் செலவில் மழைநீர் வடிகால் அமைத்தல், பள்ளியில் சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரூ. 70 லட்சம் செலவிலான பல்வேறு திட்ட பணிகளுக்கு மண்டல குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை உடனடியாக முடிக்க கோரிக்கை:
கூட்டத்தில் திருவொற்றியூர் கிழக்கு, மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் கிராமத்தெரு பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்காக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் சுரங்கப்பாதை அமைப்பதற்காக இதுவரை எவ்வித  பணிகளும் தொடங்கவில்லை.
இரண்டு பகுதிகளுக்கும் இடையே நடந்து செல்வதற்கு கூட மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர் .எனவே சுரங்கப்பாதை விரைந்து அமைப்பதற்கான பணிகளை உடனடியாக தொடங்கிட வேண்டும். மணலி சாலையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பால திட்ட பணிகளை உடனடியாக முடித்திட வேண்டும் என அதிமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்  கே. கார்த்திக் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்து பேசிய மண்டல குழு தலைவர் தனியரசு இப்பணிகள் விரைவாக முடித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
 இக்கூட்டத்தில் மண்டல அலுவலர் சங்கரன் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top