Close
செப்டம்பர் 20, 2024 6:42 காலை

தைமாதப்பிறப்பு… புதுகை கோயில்களில் சிறப்பு வழிபாடு…

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சாந்தநாதர் கோயிலில் தை மாதப்பிறப்பு சுவாமி வீதியுலா

புதுக்கோட்டை  அருள்மிகு  வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி கோயிலில்பொங்கல் பண்டிகை  சிறப்பு வழிபாடு சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

உழவு தொழிலுக்கு முதன்மையாக உள்ள சூரிய பகவானுக்கு வழிபாடு நடத்தும் வகையில் தமிழர் திருநாள் பொங்கல் விழா, தை மாதப்பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தை முதல் நாளையொட்டி, புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி கோயிலில் நந்திக்கும் வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமிக்கும்   சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

தொடர்ந்து சாந்தநாதசுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். கோவிலில் விநாயகர், சுப்பிரமணி வள்ளி தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர் பின்னர்  அருள்மிகு வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில்  திருவீதி உலா நடைபெற்றது.

புதுக்கோட்டை             சிறப்பு அலங்காரத்தில் சாந்தநாத சுவாமி வேதநாயகி அம்பாள்  

புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் தைமாதப்பிறப்பையொட்டி அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு  சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை  நடந்தது.  பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து  கொண்டனர். 

புதுக்கோட்டை குமரமலை பாலதண்டாயுதபாணி திருகோயிலில் பொங்கல்  பண்டிகை  சிறப்பு வழிபாடு குமரமலை பாலதண்டாயுதபாணி கோயிலில்   சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பாலதண்டாயுதபாணி  சுவாமிக்கு   பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை  நடந்தது .இதில்,    பக்தர்கள் திரளாக வந்திருந்து  வழிபட்டனர் .

புதுக்கோட்டை மேல ராஜ வீதியிலுள்ள அருள் மிகு தண்டாயுத பாணி சுவாமி கோவில், திருக்கோகர்ணம் பிரஹதாம்பாள் திருக்கோவில்,    பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் திருக்கோவில் உள்ளிட்ட கோவில்களில்  சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top