காளிங்கராயன் கால்வாய் வெட்டப்பட்ட தினத்தை காளிங்க ராயன் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன் பாளையத்திலிருந்து கொடுமுடி ஆவுடையார் பாறை வரை சுமார் 90 கிலோ மீட்டர் தூரம் 1282 ஆம் ஆண்டு காலிங்கராயன் மன்னரால் காளிங்கராயன் கால்வாய் வெட்டப்பட்டது. கால்வாயின் மூலம் நேரடியாக 15 , 500 ஏக்கர் பாசனமும் , மறைமுகமாக 10 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.காளிங்கராயன் கால்வாய் வெட்டப்பட்டு இன்றுடன் 741 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பயன்பாட்டிலும் , இந்த கால்வாயின் சிறப்பு அம்சமாக இடது கரையில் மட்டும் பாசன வசதி மாற்று வருவதும் சிறப்பாகும்.
இதனையடுத்து அவர் பிறந்த ஊரான கனகபுரம் அருகே அமைக்கப்பட்டு இருந்த காளிங்கராயன் திருவுருவ சிலைக்கு காளிங்கராயனின் உறவினர்களான சாத்தந்தை குலத்தைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில்ராசா சுவாமி நற்பணி மன்றத் தலைவர் முத்துச்சாமி , செயலாளர் கண்ணுச்சாமி , பொருளாளர் பொன்னுச்சாமி , துணைத்தலைவர் நடராஜ் நிர்வாகிகள் மூர்த்தி , தர்மலிங்கம் , ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம், சாகர் பள்ளி தாளாளர் சௌந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர். ஈஸ்வரன், தனது கட்சி நிர்வாகிகளுடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.