Close
செப்டம்பர் 20, 2024 6:35 காலை

கோபியில் திமுக விவசாய அணி நடத்திய சமத்துவ பொங்கல் விழா… நிர்வாகிகள் புறக்கணிப்பால் சலசலப்பு…

ஈரோடு

கோபி அருகே திமுக சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழா

கோபியில் திமுக  விவசாய அணி சார்பில் நடத்திய சமத்துவ பொங்கல் விழாவில்  பங்கேற்காமல் வடக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் புறக்கணித்துள்ளதால் கட்சிக்குள் சலசலப்பை  ஏற்படுத்தியுள்ளது.

திமுக வடக்கு மாவட்ட விவசாய அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கோபி ல.கள்ளிப்பட்டியில் நடந்தது. விழாவுக்கு விவசாய அணி மாநில தலைவர் என்.கே.கே. பெரியசாமி தலைமை வகித்தார். அமைச்சர் சு. முத்துசாமி, தில்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், துணை பொது செயலாளர் அந்தியூர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் நல்லசிவம் உள்ளிட்ட நி்ர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் கின்னஸ் சாதனை புரிந்த மங்கை வள்ளி கும்மி குழுவினரின்  கும்மி ஆட்டம், கலைத்தாய் குழுவினரின் பறைஆட்டம், ஒயிலாட்டம், சலங்கை ஆட்டம் உள்ளிட்ட தமிழர்களின் பண்பாட்டு குறித்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவுக்கான ஏற்பாடுகளை மாநில விவசாய அணி இணை செயலாளர் கள்ளிப்பட்டி மணி செய்திருந்தார். மாவட்ட செயலாளர் போட்டிக்கு கள்ளிப்பட்டி மணி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதன் காரணமாக மாவட்ட செயலாளர் நல்லசிவத்துக்கும், கள்ளிப்பட்டி மணிக்கும் இடையே  லேசான  புகைச்சல்  இருந்து வருகிறது.

இதன் காரணமாக சமத்துவ பொங்கல் விழாவுக்கு ஒன்றிய செயலாளர்கள் பேரூர் செயலாளர் யாரும் கலந்து கொள்ள வேண்டாம்  திமுக. நி்ர்வாகிகள் தரப்பில் மறைமுகமாக தெரிவிக்கப்பட்டதன் காரணமாக அமைச்சர் கலந்து கொண்ட விழாவில் ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து திமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், வடக்கு மாவட்டத்தில் 17 ஒன்றிய செயலாளர்கள் உள்ளனர்.மாவட்ட செயலாளர்  பங்கேற்கும்  நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் கலந்து கொள்வர்.

ஆனால், சமத்துவபொங்கல் விழாவில் 2 ஒன்றிய செயலாளர் கள் மட்டுமே கலந்து கொண்டனர்.மற்றவர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டனர்.  ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத்  தொகுதிக்கான இடைத்தேர்தல் இம்மாத இறுதியிலும், அடுத்த ஆண்டில் லோக்சபா தேர்தலும் நடைபெறவுள்ள  நேரத்தில் கட்சிக்குள் இவ்வாறு கோஷ்டி பூசல் இருப்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறான பிரச்னைகளுக்கு கட்சி தலைவர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top