Close
நவம்பர் 24, 2024 11:38 மணி

ஈரோடு இடைத்தேர்தல்… பிரசாரக் களத்தில் முந்திய திமுக..

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர்கள் கே.என். நேரு, சு. முத்துசாமி மற்றும் நிர்வாகிகள்

ஈரோடு கிழக்கு சட்ட மன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தலில் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக (வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் ) தேர்தல் பிரசாரத் தில் திமுக முதலாவதாக களமிரங்கியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி, ஈரோடு பெரியார் நகரில் காங்கிரஸ் வேட்பாளருக்கான (இன்னும் அறிவிக்கப்படாத) தேர்தல் பிரசாரத்தை வீட்டுவசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமியுடன் இணைந்து  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு  சனிக்கிழமை  தொடங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கே.என். நேரு பேசியதாவது:  கூட்டணி தர்மத்தின்படி  இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் ஒதுக்கியுள்ளார். அக்கட்சியின் வெற்றிக்காக பாடுபட உள்ளோம்.

ஈரோடு
தேர்தல் பிரசார களத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு. சு. முத்துசாமி உள்ளிட்டோர்

சொத்து வரி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது குறித்த கேள்விக்கு, அவர்கள் அரசை விமர்சிப்பது இயற்கையானது. உண்மையில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவு வரி உயர்வு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மக்களும் அதை ஏற்றுக்கொண்டனர். இப்போது, ​​கடந்த 18 மாதங்களில்  நாங்கள் செய்த  சாதனைகளின் அடிப்படையில் நாங்கள் வாக்குகளை கேட்கிறோம் என்றார் கே.என். நேரு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top