Close
நவம்பர் 22, 2024 12:08 மணி

குடியரசு நாள் விழா… புதுக்கோட்டையில் ஆட்சியர் கவிதா ராமு கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் அளிப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற குடியரசு நாள் விழா

புதுக்கோட்டை மாவட்டம் 74 -ஆவது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தேசியக் கொடி ஏற்றினார்.

புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் இந்தியாவின்  74 -ஆவது குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு இன்று (26.01.2023) தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) ரா.ரமேஷ் கிருஷ்ணன் முன்னிலையில் காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களை பறக்கவிட்டு, தேசியக் கொடியின் வண்ணத்தை குறிக்கும் வகையிலான பலூன்களையும் மாவட்ட ஆட்சியர் பறக்க விட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாகப் பங்கேற்றார்கள்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களுடைய வாரிசுதாரர்களுக்கு கதராடை அணிவித்து சிறப்பித்தார்.

மேலும்   47 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களும் மற்றும் பல்வேறு நிலைகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்புத் துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக பணி புரிந்த 548 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  வழங்கினார்.

மேலும் வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, தாட்கோ, வேளாண்மை – உழவர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில், திருமண உதவித்தொகை.

இயற்கை மரண உதவித்தொகை, பவர் வீடர், பவர் டில்லர், வருடாந்திர பராமரிப்பு மானியம், பயணிகள் வாகனம், தெளிப்பு நீர் பாசனக் கருவி, சலவைப் பெட்டி, தையல் இயந்திரம் உள்ளிட்ட ரூ.10,62,428 மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை 33 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு,  வழங்கினார்.

இசைப்பள்ளி, புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை ஜெயராணி மெட்ரிக் பள்ளி, எல்.என்.புரம் செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திரு இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி.

கந்தர்வகோட்டை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய 7 பள்ளிகளைச் சேர்ந்த 720 மாணவ, மாணவிகள், தேசபக்தி பாடல், செம்மொழியாம் தமிழ்மொழி, தமிழகத்தின் நாட்டுப்புற கலைகள், தாய் தமிழின் சிறப்பு, எங்கள் பாரதம், தேசிய ஒருமைப்பாடு, பிரமிட் போன்ற கலைநிகழ்ச்சிகளை நடத்திக்காட்டினர்.

புதுக்கோட்டை
குடியரசு நாள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) திரு.பெ.வே.சரவணன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்,

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  து.தங்கவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்  அமீர் பாட்சா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, துணை இயக்குநர் (தோட்டக்கலை)  குருமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன்,  வட்டாட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top