Close
செப்டம்பர் 20, 2024 6:56 காலை

மணலி அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.2. 52 செலவில் புதிய கட்டடங்கள்

சென்னை

மணலியில் புதிய கட்டடங்களுக்கான பூமிபூஜையில் அடிக்கல் நாட்டி வைத்த கலாநிதி வீராச்சாமி எம்பி

மணலி அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.2. 52 செலவில்  புதிய கட்டடங்களுக்கான பணிகளுக்கு  டாக்டர் கலாநிதி வீராசாமி எம் பி அடிக்கல் நாட்டினார்
சென்னை மணலில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளியில் ரூ 2.52கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் அமைப்பதற்கு வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
 மணலி சின்னசேக்காடு பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.  இங்கு சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். போதிய வகுப்பறைகள் இல்லாததால் கூடுதல் வகுப்பறைகளுக்காக புதிய கட்டிடங்கள் அமைத்து தர வேண்டும் என தொடர்ந்து பெற்றோர்களும் மாணவர்களும் கோரிக்கை எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் அரசு நிதி ரூ.1.68 கோடி, எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் சார்பில் சமூக பொறுப்பாண்மை திட்டத்தின் கீழ் ரூ.2.52 கோடி செலவில் சுமார் 13  வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு பொதுப்பணித் துறை சார்பில்  வெள்ளிக்கிழமை பூமி பூஜை மணலி சின்னசேக்காட்டில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்றது .
இதில் வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி கலந்துகொண்டு புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிகல்லை நாட்டி வைத்தார்.
 இந்நிகழ்ச்சியில் மணலி மண்டல குழு தலைவர் ஏ. வி. ஆறுமுகம், காமராஜர் துறைமுக துணைப் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன்,  சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல இணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாமன்ற உறுப்பினர் தீர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top