Close
நவம்பர் 22, 2024 12:42 மணி

புதுக்கோட்டை மாவட்ட திட்டங்கள் முன்னேற்றம் குறித்த செயலாக்க ஆய்வுக் கூட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திட்டங்கள் முன்னேற்றம் குறித்த செயலாக்க ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம்ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திட்டங்கள் முன்னேற்றம் குறித்த செயலாக்க ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் .எம்.எம்.அப்துல்லா அவர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் .கு.சண்முகசுந்தரம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்  (27.01.2023) நடைபெற்றது.

பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் மூலமாக பல்வேறு திட்டங்கள் வேளாண்மைத்துறை, தொழில்துறை, தாட்கோ, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டங்களின் முழு பயன்பாட்டினையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயலாற்றும் வகையில் அனைத்து துறை அலுவலர் களுடனான ஆய்வுக் கூட்டம் இம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்  பேசியதாவது;

ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகள், கிராமப்புற இளைஞர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலமாக தனிநபர் வருமான மேம்படுவதுடன், நாட்டின் பொருளாதாரமும் உயர்வடை கிறது.

அதனடிப்படையில், வேளாண்மைத்துறை மற்றும் தொழில்துறையில் ஆண்டுக்கு ரூ.2,000 கோடி அளவில் வர்த்தகம் நடைபெறும் நகரங்களை கண்டறிந்து அவற்றை ‘டவுன் ஆப் எக்ஸ்போர்ட் எக்சலன்ஸ்” Towns of Export Excellence (TEE)  என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தையும் இப்பிரிவின்கீழ் கொண்டுவர அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கி ணைந்து பொதுமக்களிடையே அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை தொழில் முனைவோ ராக்க வேண்டும்.  இந்த இலக்கினை அடைய அரசின் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்காக செயல்படுத் தப்படும் திட்டங்களின் முழு பயன்பாட்டை பெறுவதற்கு வங்கிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

நமது இலக்கினை ஒரே நாளில் அடைய இயலாது. சிறு, சிறு முயற்சிகளால் மட்டுமே பெரிய சாதனைகளை மேற்கொள்ள முடியும். எனவே அரசு அலுவலர்கள் அனைவரும் தங்களது துறைகளின் மூலமாக பொதுமக்களை, அவர்கள் இருக்கும் நிலையிலிருந்து ஒருபடியாவது முன்னேற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம்  தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, வேளாண் இணை இயக்குநர்  பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், மாவட்ட மேலாளர் (தாட்கோ) முத்துரெத்தினம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் .ஆனந்த், உதவி பொதுமேலாளர் (நபார்டு) எஸ்.ஜெயஸ்ரீ மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top