புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட வன அலுவலர் செ.பிரபா தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும். அதன்படி, 2022-2023 ஆம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பானது, நீர் பறவைகள் மற்றும் நில பறவைகள் என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. நீர் பறவை களின் கணக்கெடுப்பானது, ஜனவரி, 28 மற்றும் 29 -ஆம் தேதிகளிலும் நடத்தப்படுகிறது.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 5 வனசரக அலுவலகங்களுக்குட்பட்ட 20 ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் 28.01.2023 மற்றும் 29.01.2023 ஆகிய தினங்களில் நடைபெறுகிறது. பறவைகள் இனபெருக்கத் திற்காக பல்வேறு வெளிநாடுகள் மற்றும் பிறமாநிலங்களி லிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருடம் தோறும் வருகை புரிகின்றன. அதன்படி, வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலமான செப்டம்பர் மாதத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு பறவைகள் எண்ணிக்கை மதிப்பிடப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழை முடிவடைந் துள்ள இச்சூழ்நிலையில் 28.01.2023 மற்றும் 29.01.2023 ஆகிய தினங்களில் புதுக்கோட்டை வனசரகத்திற்குட்பட்ட அன்னவாசல் கண்மாய், ஆரியூர் கண்மாய், அருவாக்குளம், கவிநாடு கண்மாய், அறந்தாங்கி வனசரகத்திற்குட்பட்ட பொன்பேத்தி ஏரி, செய்யானம் ஏரி, கரகத்திக்கோட்டை கண்மாய், முத்துக்குடா கடல், கோடியக்கரை கடல்,
பொன்னமராவதி வனசரகத்திற்குட்பட்ட காரையூர் காரை கண்மாய், ஒலியமங்கலம் கண்மாய், ஏனாதி கண்மாய், கொன்னை கண்மாய், கீரனூர் வனசரகத்திற்குட்பட்ட நீர்பழனி கண்மாய், ஒளவையார்பட்டி கண்மாய், பேராம்பூர் கண்மாய், குளத்தூர் கண்மாய், திருமயம் வனசரகத்தி ற்குட்பட்ட தாமரை கண்மாய், பெல் ஏரி, நல்லம்மாள் சமுத்திரம் ஆகிய 20 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வடகிழக்கு பருவமழை காலங்களில் பறவைகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பு அல்லது குறைவிற்கான காரணம் குறித்து ஆராயப்படும்.
ஒவ்வொரு ஈர நிலத்திலும் மேற்கொள்ளப்படும் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகளில் ஒரு பறவைகள் நிபுணர், இரண்டு தன்னார்வலர்கள், 2 வனத்துறை அலுவலர்கள், ஒரு என்.ஜி.ஓ. மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இடம்பெற உள்ளனர். இப்பணிகள் மூலம் பறவைகளுக்குத் தேவையான உணவு, நீர் மற்றும் இருப்பிடம் ஆகியவை போதுமான அளவில் கிடைக்கப் பெறுக்கின்றனவா என்பது குறித்து கணக்கிட முடியும் என்பது குறிப்பிடதக்கது என மாவட்ட வன அலுவலர் செ.பிரபாதெரிவித்துள்ளார்.
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு.. முதன்முதலில் 1998 இல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. இது பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நடத்தப்படுகிறது. 2013 முதல், இந்த நிகழ்வை சர்வதேச பறவை நோக்கர்கள் கவனித்தனர். இப்போது யார் வேண்டுமானாலும் இந்த நிகழ்வில் பங்கேற்கலாம். மேலும் இதில் உலகெங்கிலும் உள்ள வனவிலங்கு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களும் கூடுதலாக ஆதரவளித்து பங்கேற்றுள்ளன.ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்புடன் ஒத்துப்போகும் வகையில் பல தனித்தனி பறவைக் கண்காணிப்பு முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு உலகளவில் அறியப்பட்ட பறவை இனங்கள் கிட்டத்தட்ட பாதி இதன் மூலம் அறியப்பட்டன.