Close
நவம்பர் 22, 2024 2:10 மணி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்றத்தேர்தலில் எதிரொலிக்கும்: முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

ஈரோடு

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்எல்ஏ .

ஈரோடு அசோகபுரம் பகுதியில்  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்எல்ஏ இன்று  நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கிழக்கு தொகுதி தேர்தல்  களத்தில் அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பல்வேறு தேர்தல் களம் கண்டவர்கள் என்பதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக  நடைபெற்று  வருகிறது..

அதிமுகவை பொருத்தவரை இந்தத் தேர்தலில் வெற்றி  இலக்கை எட்டுவதற்கு அயராது பணியாற்றி  வருகிறோம். எனவே எங்களது களப்பணி என்பது வரலாற்றில் இல்லாத வகையில் அமைய உள்ளது. அதற்கான அறிவுரைகளை நிர்வாகிகளுக்கு  எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.

மேலும் வெற்றி என்ற இலக்கை எளிதில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது .கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால், இந்த தேர்தல் செங்கோட்டை  வியக்கத்தக்க அளவிற்கு எதிர்காலத்தில் மாற்றத்தை உருவாக்க இருக்கிறது. இந்த குரல் டெல்லி செங்கோட்டைக்கு ஒலிக்க இருக்கிறது.

அதிமுக எத்தனை அணிகளாக பிரிந்து இருந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்திருப்பதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அவர்கள் (தி.மு.க) மாடியில் இருந்து மக்களை பார்ப்பதாகவும், அதிமுகவினர் மக்களோடு இருந்து மாடியை பார்ப்பதாகவும், வெற்றி என்பது எங்கள்  இலக்காக உள்ளது.

ஒவ்வொரு இயக்கத்தினரும் தங்களுக்கான கொள்கை முடிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.எங்கள் ஆட்சி மன்ற குழு கூட்டம் தலைநகரில்தான் நடைபெறும். பிரசாரத்திற்கு தடைகள் இல்லை . அதிமுக மெகா கூட்டணியுடன் இணைந்து பிரசார பணிகளை மேற்கொள்ள உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் மூலம் வேட்பாளர் அறிவிக்கப் படும் போது களம் இன்னும் வேகமாக இருக்கும். ஆதரவு கேட்ட கட்சியின் நிலைப்பாடு குறித்து 2, 3 நாட்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்.

மக்களை பொருத்தவரை மாற்றத்தை விரும்புகிறார்கள். நாங்கள் வீடு வீடாக சென்று களப்பணி ஆற்றும்போது மாற்றம் தேவை என வெளிப்படையாக மக்கள் கூறி வருகின்றனர்.இந்த தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும் என்றார் கே.ஏ. செங்கோட்டையன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top