Close
நவம்பர் 22, 2024 5:41 மணி

திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சு

ஈரோடு

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் தெரிவித்தார்.

ஈரோடு திமுக- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து திருநகர் காலனி பகுதியில் நடைபெற்ற ஊழியர் கூட்டத்தில்  பங்கேற்று மேலும் பேசியதாவது:

முதலமைச்சர் பல்வேறு நல திட்டங்களை அமலாக்கி வருகிறார்.  இதனால் ஈவிகேஎஸ். இளங்கோவனின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.  ஈரோட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மழைநீர் வடிகால்கள் புதிதாக அமைக்கப்படுகின்றன. சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர், சித்தா, ஓமியோபதி ஆயுர்வேதா டாக்டர்கள் 130 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.  மருத்துவத் துறையில் மேலும் 800 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

மருத்துவர் துறைதேர்வு வாரியம் மூலம் தேர்வு எழுதி பணியில் சேரலாம். ஈரோடு அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் ஏற்கெனவே ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட ஊதியத்தை பெறுவதற்கு சம்மதித்தனர். ஒப்பந்த நிறுவனம் அந்த ஊதியத்தை வழங்க  வலியுறுத்தப்படும்.

பெண்கள் சாணி பவுடர் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற காரணத்தால் சாணி பவுடர் விற்பனையை தடை செய்தோம்.  எலி காய்ச்சலால் இறப்பு நேர்ந்ததாக குறிப்பிட்டால் உரிய விசாரணை நடத்தப்படும்  என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top