ஈரோடு மாவட்டம், பெருமுகையில் டி..என். பாளையம் வட்டாரம், குமரகுரு வேளாண் கல்லூரி மாணவிகள் ச.ஹேமநந்தினி,து.கவின்யா,சை.ஜா.மும்தாஜ், மு.ருத்ரபிரியா ,ச.சத்யா,ரா.ஷர்மிளா,செ.ஸ்ரீநிதா,லோ.ஸ்ரீவர்ஷினி, சே.சுவேதா நான்காம் ஆண்டு கிராம வேளாண் பணி அணுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை நடத்தினர்.
இந்தமுகாமிற்கு வழிகாட்டியாகச் செயலாளர் செல்லக்குமார் செயல்பட்டார். கால்நடை மருத்துவர் பகவதி மற்றும் துணை உதவியாளர்கள் சதீஷ்குமார் ,ரேவதி ஆகியோர் கால்நடைகளுக்கு அம்மை தடுப்பூசி , சத்து மருந்து ,கோழி கழிச்சல் மாத்திரைகள் , பூச்சி மருந்துகள் மற்றும் சினை ஊசிகள் அளித்தனர்.
மேலும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த கன்றுகளுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பாகப் சான்றிதழ் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கால்நடைகளுக்குக் குடற்புழு நீக்கம் ,பெரியம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசி,தாது உப்புக்கலவை ,வெள்ளைக் கழிச்சல் நோய்க்கான சிகிச்சை போன்றவற்றைக் கால்நடை மருத்துவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் தங்கள் ககால்நடைகளோடு கலந்துகொண்டனர். மேலும் விவசாயிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.மேலும் கால்நடை மருத்துவர் கால்நடைகளைப் பரிசோதனை செய்துவிட்டு நோய்க்கான ஊசி,மருந்துகளைத் தந்தார்.