Close
நவம்பர் 21, 2024 11:42 மணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாகனங்களில் கடத்திய 2.15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- 3 பேர் கைது

புதுக்கோட்டை

திருமயம் அருகே அரிசி கடத்தியதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்

கடந்த ஜனவரி 5 -ஆம் தேதி புதிதாக பொறுப்பேற்ற தமிழ்நாடு சிவில் சப்ளை சிஐடி ஏடிஜிபி   அருண் பிறப்பித்த  உத்தரவில்,  தமிழ்நாட்டில் அரசால் வழங்கப்படும் பொதுவிநியோக திட்ட ரேசன் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் மற்றும் கலப்பட டீசல் கடத்துதல் மற்றும் பதுக்குவது சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என்று  அறிவுறுத்தினார்.

திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜதா அவர்கள் மேற்பார்வையில் தஞ்சாவூர் சரக காவல் துறை துணைக் கண்கானிப்பாளர் சரவணன் அவர்கள் தலைமையில் புதுகோட்டை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய் வுத்துறை போலீசார் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்,

அரிசி கடத்திய நான்கு சக்கர வாகனம் பறிமுதல்- 2 பேர் கைது:

திருமயம் தாலுகா, அரிமளம் அருகே  கல்லூர் பகுதியில் வாகன தணிக்கை செய்த போது அப்பகுதியில் வந்த  நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்தனர்.

அதில், கல்லூர் கண்ணன் மகன் பாண்டியராஜன் சுமார் 1000 கிலோ ரேசன் அரிசி கடத்தி  வந்தது  தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்தனர்.  அவர் அளித்த  ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில், அவரது தந்தை கண்ணன் வீட்டிற்கு சென்று அங்கு பதுக்கியிருந்த சுமார் 1000 கிலோ ரேசன் அரிசி என மொத்தம் 2000 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து  அரிசி கடத்தல் மற்றும் பதுக்கி வைத்திருந்த குற்றத்துக்காக  பாண்டியராஜன், கண்ணன் ஆகியோர் மீது புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத் துறை போலீசாரால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

இருசக்கர வாகனத்தில் அரிசி கடத்தியவர் கைது:

புதுக்கோட்டை
அரிசி கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனம்

புதுகோட்டை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய் வுத்துறை போலீசார் கே. புதுப்பட்டிபகுதியில் வாகன தணிக்கை செய்த போது, இருசக்கர வாகனத்தில்   சுமார் 150 கிலோ ரேசன் அரிசி கடத்தி சென்ற கும்மங்குடி பெரியகருப்பன் ரஞ்சித்  என்பவை கைது செய்து, அவர் மீது புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாரால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top