Close
மே 22, 2025 11:37 மணி

மதுரை மாநகராட்சி துணை மேயரைக்கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

மதுரை

மதுரை துணை மேயரைக்கண்டித்து பாஜகவினரின் ஆர்ப்பாட்ட சுவரொட்டி

மாநகராட்சி துணை மேயர் நாகராஜை கண்டித்து கொட்டும் மழையிலும்  பாஜகவினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், பொது பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டியதை கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி ஜெய்ஹிந்த்புரம் மண்டலம் சார்பில் செல்வகுமார் தலைமையில் கொட்டும் மழையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கே.பி. பிரபு, செண்பகபாண்டியன், ராம்ஜி, இசக்கிமுத்து, மாவட்டத்தலைவர் மகா.சுசீந்தரன், இளங்கோ, மீனா, இசக்கிமுத்து, மாவட்ட துணைத் தலைவர் ஓம்சக்தி, மதுரை மாவட்ட மகளிர் தனலட்சுமி மற்றும் ஏராளமான மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top