Close
நவம்பர் 22, 2024 12:01 மணி

ஈரோடு கிழக்கு தொகுதி 3 வது நாளாக 10 பேர் வேட்புமனு தாக்கல்

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை 10 பேர் மனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி 3வது நாளான நேற்று நாம் தமிழர் கட்சி உள்பட 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. நேற்றுமுன்தினம் வரை 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி முகமது அனிபா, திருச்சுழியை சேர்ந்த சுந்தரமூர்த்தி,

ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி மாநில தலைவா் காந்தி, சென்னை விருகம்பாக்கம் இசக்கிமுத்து, உழைப்பாளி மக்கள் கட்சி சார்பில் குப்புசாமி, முகமது இலியாஸ், மண்ணின் மைந்தர்கள் கழகம் ஜார்ஜ் பெர்னாண்டஸ், தேசிய மக்கள் கழகம் விஜயகுமாரி, தங்கவேல் உள்ளிட்ட 10 பேர் நேற்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

முன்னதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா கரும்புகளுடன் பேரணியாக வந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர்க்குள் பேரணி வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக டிஎஸ்பி பவித்ரா கூறினார்.

ஆனால் இதை ஏற்றுக்கொள்ள மறுத்த நாம் தமிழர் கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தேர்தல் நடத்த விதிமுறைகளை போலீசார் விளக்கி கூறியதையடுத்து வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் பேரணி காரணமாக பிரப் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top