ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதென தமிழ் நாடு கோயில் பூசாரிகள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் வாசு, செயலாளர் சங்கர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒருகால பூஜை நடைபெறும் கோயில் பூசாரிகளுக்கு மாதம் ரூ. 1,000 ஊக்கத்தொகை, பூசாரி ஓய்வூதியம் ரூ. 4,000ஆக உயர்வு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் சட்டம், கிராமப்புற கோயில் திருப்பணி நிதி ரூ. 20,000ஆக உயர்வு, ஒருகால பூஜை வங்கி வைப்புத் தொகை ரூ. 2 லட்சமாக உயர்வு, தாய் மொழியாம் தமிழில் அர்ச்சனை போன்ற நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் திராவிட மாடல் ஆன்மிக ஆட்சிக்கு எங்கள் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன், இந்த நல்லாட்சி தொடர, நடைபெறவுள்ள ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரவு தெரிவிப்பதுடன், 2 தேர்தல் பணிக்குழுக்கள் அமைத்து பிரச்சாரம் மேற்கொள்ளவும் சங்கத்தின் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.
வேட்பாளரை சந்தித்த மாநில நிர்வாகிகள்:
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனை கோவில் பூசாரிகள் நலச் சங்க நிர்வாகிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி. வாசு அவர்கள் தலைமையில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்தினர். ஈரோடு கிழக்கு தொகுதி உள்ள பூசாரிகள் கை சின்னத்தில் வாக்களிப்பதென வீடு வீடாக சென்று பூசாரிகளிடம் பிரசாரம் செய்வதாகவும் அவரிடம் தெரிவிக்கபட்டது,
அதற்கு வேட்பாளர் இளங்கோவன் மகிழ்ச்சி அடைந்தார் அவரை சந்தித்த பிறகு சேலம் மத்திய மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரனை சந்தித்து கோவில் பூசாரிகள் நல சங்கத்தின் சார்பாக இன்றைய தினம் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்து வருவதாக தெரிவித்தோம். மகிழ்ச்சியுடன் வரவேற்று சுற்றுப்பயணத்தை விரிவுபடுத்துங்கள் என்று தெரிவித்தார்..
உடன் சங்கத்தின் மாநில செயலாளர் சங்கர், ஈரோடு மாவட்ட தலைவர் ஸ்ரீதர், ஈரோடு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், நாமக்கல் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, நாமக்கல் மாவட்ட பொருளாளர் முருகன் மற்றும் சேலம் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.