Close
நவம்பர் 25, 2024 5:22 காலை

தஞ்சை மாவட்ட போரூராட்சிப்பகுதி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம், போராவூரணி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம்   நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர்  பேரூராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள்.

அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் உள்ள 20 பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ப்பட்டு வருகிறது. அதன்படி  (2.2.2023) பேராவூரணி மற்றும் பெருமகளூர் ஆகிய பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் பேராவூரணி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகள் மற்றும் பெருமகளூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகள் ஆகிய வார்டுகளுக்கு தேவையான குடிநீர் வசதி, மின்சார வசதி, வடிகால் வசதி, பேருந்து வசதி, தெருவிளக்கு வசதி, பொது விநியோக திட்ட விற்பனை அங்காடி அமைப்பது, பள்ளி சுற்றுச் சுவர் அமைப்பது, மயான கூரை அமைப்பது, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து உறுப்பினர்களிடம் கேட்டறியப்பட்டது. உறுப்பினர்கள் கூறிய கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்ற உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் பேராவூரணி பேரூராட்சி அலுவலகம் மற்றும் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அலுவலக கோப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்தஆய்வின் போது பேரூராட்சி தலைவர்  சாந்திசேகர் ,உதவி இயக்குனர் பேரூராட்சிகள் கோ.கனகராஜ் அவர்கள்,செயல் அலுவலர்  பா.பழனிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  பு. செல்வேந்திரன் (வ.ஊ) , எஸ்.தவமணி (கி. ஊ) பேராவூரணி வட்டாட்சியர் சுகுமார்,செயல் அலுவலர் . செ.புனிதவதிமற்றும் அரசுஅலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top