புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில், தேசிய நகர்நல குழும திட்டத்தின் கீழ் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்க ளின் நகர்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் நிலை-II (MPHW-Male) மற்றும் மருத்துவமனை பணியாளர் (Hospital Worker/Support Staff) காலிப்பணியிடங்களுக்கான விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 15.02.2023 ஆகும்.
பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் நிலை-II (MPHW-Male), புதுக்கோட்டை மாவட்ட அரசு நகர்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள ஒப்பந்த பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் நிலை-II (MPHW-Male) பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர் பன்னிரெண்டாம் வகுப்பில் தாவரவியல் / உயிரியல் / விலங்கியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் இயக்குநர், பொது சுகாதார துறையினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இரண்டு ஆண்டு சுகாதார பணியாளர் பயிற்சி (MPHW / Heath Inspector Grade- II / Sanitary Inspector தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கான உரிய மதிப்பெண் மற்றும் இயக்குநர், பொது சுகாதாரத் துறையினால் வழங்கப்பட்ட சான்று இணைக்கப்பட வேண்டும்.
கோவிட்- 19 கொரோனா நோய் தடுப்பு பணிகளில் பணியாற்றிய முன்அனுபவம் இருப்பின் அதற்குரிய முன் அனுபவச் சான்று கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட முன்அனுபவச் சான்று அம்மாவட்ட துணை இயக்குநர், சுகாதாரப் பரிகள் அவர்களிடம் பெறப்பட்டு விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் இருப்பிடத்திற்கான உரிய சான்று கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். மொத்த ஒப்பந்த பல்நோக்கு சுகாதார பானியாளர் / சுகாதார ஆய்வாளர் நிலை-II (MPHW-Male) காலிப்பணியிடம் இரண்டு (2), இப்பணியிடத்திற்கான ஒப்பந்த மாத ஊதியம் ரூ.14,000- வழங்கப்படும்.
மருத்துவமனை பணியாளர் (Hospital Worker / Support Staff), புதுக்கோட்டை மாவட்ட அரசு நகர்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள ஒப்பந்த மருத்துவமனை பணியாளர் (Hospital Worker / Support Staff) பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஆதரவற்ற விதவை மற்றும் மாற்றுத் திறனாளியாக இருப்பின் அதற்குரிய சான்றிதழ் உரிய அலுவலர்களிடம் கண்டிப்பாக பெற்று இணைக்கப்பட வேண்டும். மொத்த காலிப்பணியிடம் இரண்டு (2), இப்பணியிடத்திற்கான ஒப்பந்த மாத ஊதியம் ரூ.8,500- வழங்கப்படும்.
மேற்கண்ட பணியிடங்களுக்கான நிரப்பப்பட்ட விண்ணப்பங் களை துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், பழைய பேருந்து நிலையம் அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில், மதுரை ரோடு, புதுக்கோட்டை – 622 001 -என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி – 15.02.2023 அன்று மாலை 5 மணி வரை விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இப்பணியிடங்கள் தேசிய நகர்புற சுகாதார திட்டத்தின் கீழ் மூற்றிலும் தற்காலிகமானது மேலும், பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்டபட்டது எனவும், வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்டபணிகளுக்கானவிண்ணப்பம்https://pudukkottai.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.