தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச்சான்று வழங்குவதற்கு வட்டார வாரியாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், மன நல மருத்துவர், கண் மருத்துவர் காது மூக்கு தொண்டை மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளார்கள்.
மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. இம்முகாமில் வயது வரம்பின்றி அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு பயன்பெறலாம்
மருத்துவ முகாம் நடைபெறும் வட்டாரம் இடம்:
பூதலூர் வட்டாரம்-சிவசாமி அய்யர் உயர்நிலைப்பள்ளி, திருகாட்டுப்பள்ளி(பிப்.8).
பேராவூரணி வட்டாரம்- அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பேராவூரணி.(பிப்.10)
பட்டுக்கோட்டை-நகராட்சி நடுநிலைப்பள்ளி கண்டியன் தெரு, பட்டுக்கோட்டை(பிப்.11).
அம்மாபேட்டை-ரெஜினா சேலி மேல்நிலைபள்ளி, அம்மா பேட்டை(பிப்.14).
திருவோணம்- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவோணம்(பிப்.16).
மதுக்கூர்- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , மதுக்கூர்(பிப்.17).
பாபநாசம்- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாபநாசம்(பிப்.18).
மேற்படி முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை பெறாத அனைத்து மாற்றுத்திறனாளிகளும் (வயது வரம்பின்றி) சிறப்பு முகாமில் காலந்துகொண்டு பயன்பெறலாம்.
மேலும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை(UDID Card) பெறாதவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் -2 ஆகிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து கலந்து கொண்டு பயன் பெறுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்