முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது இதில் 22 மாட்டு வண்டிகளும் 21 குதிரை வண்டிகளும் பங்கேற்றன,
அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 -ஆவது பிறந்தநாள் முன்னிட்டு அதிமுக சார்பில் மச்சுவாடியில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எங்கே பந்தயம் நடைபெற்றது.
இந்த போட்டியினை விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இந்த பந்தயத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏழு பெரிய மாட்டு வண்டிகளும் 15 சிறிய மாட்டு வண்டிகள் என 22 மாட்டு வண்டிகளும் அதேபோன்று பெரிய குதிரைகள் எட்டு வண்டிகளும் சிறிய குதிரைகள் 13 வண்டிகளும் என 21 குதிரை வண்டிகளும் பங்கேற்றன.
இந்த பந்தயத்தில் போக வர 8 கிமீ தொலைவு என நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. சாலைகளில் குதிரை மற்றும் மாட்டு வண்டிகள் எல்லையை கடக்க சீறிப்பாய்ந்து ஓடின இதனை சாலையில் இருபுறம் இருந்த ஏராளமான பொதுமக்கள் ஆரவாரத்துடன் கைதட்டி உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். இதில் வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரையின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.