Close
நவம்பர் 25, 2024 2:23 காலை

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் பங்கேற்க அழைப்பு

புதுக்கோட்டை

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் பங்கேற்கலாம்.

2022-2023-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக கீழ்காணும் விவரப்படி நடைபெறவுள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகள் பிரிவில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் 09.02.2023 மற்றும் 10.02.2023 ஆகிய தேதிகளில் கூடைப்பந்து, சிலம்பம், இறகுப்பந்து, நீச்சல், மேசைப்பந்து மற்றும் மாணவர்களுக்கு வாலிபால் போட்டியும், மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டிகள் 21.02.2023 மற்றும் 22.02.2023 ஆகிய தேதிகளில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.

வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டையில் 09.02.2023 அன்று மாணவிகளுக்கான வாலிபால் போட்டிகளும், ஸ்ரீ பிரகதாம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 09.02.2023 அன்று மாணவ,மாணவிகளுக்கான வளைகோல் பந்து போட்டிகளும்.

09.02.2023 தேதியில் தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு கால்பந்து போட்டிகளும், மாட்சிமை தங்கிய மாமன்னர் கல்லூரியில் 09.02.2023 மற்றும் 10.02.2023 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கான கால்பந்து, கபாடி போட்டிகளும்.

10.02.2023 அன்று மாணவிகளுக்காக கபாடி போட்டிகளும், 23.02.2023 மற்றும் 24.02.2023 ஆகிய தேதிகளில் மாணவர்களுக் கான கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவுள்ளது.

கல்லூரி மாணவ, மாணவிகள் பிரிவில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் 13.02.2023 மற்றும் 14.02.2023 ஆகிய தேதிகளில் வாலிபால் கூடைப்பந்து, சிலம்பம், இறகுப்பந்து, நீச்சல், மேசைப்பந்து போட்டிகளும், 15.02.2023 மற்றும் 16.02.2023 மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவுள்ளளது.

ஸ்ரீ பிரகதாம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 13.02.2023 தேதியில் மாணவ,மாணவிகளுக்கான வளைகோல் பந்து போட்டிகளும் நடைபெறவுள்ளது.

மேலும் மாட்சிமை தங்கிய மாமன்னர் கல்லூரியில் 13.02.2023-ம் தேதியில் மாணவ, மாணவிகளுக்கான கால்பந்து, போட்டிகளும், 13.02.2023 மற்றும் 14.02.2023 ஆகிய தேதிகளில் மாணவ, மாணவிகளுக்காக கபாடி போட்டிகளும், 20.02.2023 தேதியில் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்களுக் கான தடகளம், இறகுபந்து அடாப்டட் வாலிபால் எறிபந்து, மற்றும் கபடி 17.02.2023 -ம் தேதியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.

பொதுப்பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வாலிபால், சிலம்பம், இறகுப்பந்து, தடகளம், போட்டிகள் 21.02.2023- ம் தேதியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்திலும்,

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபாடி மற்றும் கிரிக்கெட் போட்டிகள் மாட்சிமை தங்கிய மாமன்னர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. அரசு ஊழியர்கள் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபாடி, தடகளம், இறகுப்பந்து, கையுந்துபந்து, செஸ் போட்டிகள் 27.02.2023 -ஆம் தேதியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.

மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளுக்கான பிரிவில் கடற்கரை கையுந்துபந்து விளையாட்டுப் போட்டிகள் 13.02.2023 -ஆம் தேதியில் இராமநாதபுரம் மாவட்டம், சீதக்காதி விளையாட்டரங்கத்திலும்,

பளுதூக்குதல் போட்டிகள் மாணவர்களுக்கு 23.02.2023 தேதியிலும், மாணவிகளுக்கு 24.02.2023 தேதியிலும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.

டென்னிஸ் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளுக் கான பிரிவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், சிவகங்கை மாவட்டத்தில் மாணவர்களுக்கு 23.02.2023 தேதி மற்றும் மாணவிகளுக்கு 24.02.2023-ம் தேதியிலும் நடைபெறவுள்ளது.

போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000 – மும், இரண்டாம் பரிசாக ரூ.2000 – மும், மூன்றாம் பரிசாக ரூ.1000 -மும் வழங்கப்படும். மாவட்ட அளவிலான தனிநபர் போட்டிகளில் முதலிடம் பெறுபவர்களும் குழு போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர், வீராங்கனைகளும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர்.

ஏற்கெனவே போட்டிகளில் கலந்து கொள்ள  www.sdat.tn.gov.in  என்ற இணைய தளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் கலந்துகொள்ள முடியும். பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் போட்டிகள் நடைபெறும் விபரத்தினை குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிந்து கொள்ளலாம் வயது சான்று, ஆதார் கார்டு, வங்கி புத்தக நகல், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் படிப்பதற்கான போனோபைட்(Bonafide) சான்றிதழ்கள், அரசு ஊழியர்கள் நிரந்தர பணியாளர்க ளுக்கான அடையாள அட்டை எடுத்து வர வேண்டும்.

போட்டியாளர்கள் போட்டி நடக்கும் இடத்திற்கு காலை 7.00 மணிக்கு ஆஜராக வேண்டும். இணைய தளத்தில் பதிவு செய்யாதவர்கள் நேரடியாக போட்டியில் கலந்து கொள்ள இயலாது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கம், புதுக்கோட்டை அலுவலகத்திலோ அல்லது தொலைபேசி எண் 7401703498 (அல்லது) 04322222187 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top