Close
செப்டம்பர் 20, 2024 3:41 காலை

விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித்துறை  உருவாக்கக்கோரி மார்ச்.16-ல் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடந்த விவசாயதொழிலாளர் சங்க மாநில மாநாட்டு நிறைவு நாளில் பேசிய சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர்ராஜன்

விவயாத் தொழிலாளர்களுக்கு தனித்துறை  உருவாக்கக் கோரி மார்ச்.16-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென விவசாயத்தொழிலாளர்கள் சங்க  மாநில மாநாட்டில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு என தனித்துறையை உருவாக்க வலியுறுத்தி வருகின்ற மார்ச்.16 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாகவும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என புதுக்கோட்டையில் நடந்த அச்சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி அறிவிக்கப்பட்டுள்ளள்ளது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு புதுக்கோட்டையில் பிப்.4,5,6 தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்றது.

நிறைவு நாளான திங்கள்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பிரதிநிதிகளின் விவாதங்களுக்கு மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் தொகுப்புரை வழங்கினார். மாநாட்டை வாழ்த்தி சங்கத்தின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் பி.வெங்கட், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சௌந்தர்ராஜன் ஆகியோர் பேசினர்.

புதிய நிர்வாகிகள் தேர்வு:

புதுக்கோட்டை
மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பழனிசாமி, சின்னத்துரை, அமிர்தலிங்கம்

மாநாட்டில், தலைவராக எம்.சின்னத்துரை எம்எல்ஏ, பொதுச் செயலாளராக வீ.அமிர்தலிங்கம், பொருளாராக அ.பழனிச்சாமி, துணைத் தலைவர்களாக ஏ.லாசர், பி.வசந்தாமணி, மலைவிளைப்பாசி, அ.கோதண்டன், ஜி.ஸ்டாலின்.

எம்.முருகையன், ஜி.கணபதி செயலாளராக எஸ்.சங்கர், எம்.முத்து, சி.துரைசாமி, எஸ்.பூங்கோதை, எஸ்.பிரகாஷ், வீ.மாரியப்பன், க.சண்முகவள்ளி உள்ளிட்ட 82 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது.

மாநாட்டை நிறைவு செய்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் உரையாற்றினார். விதொச புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் டி.சலோமி நன்றி கூறினார்.

விவசாயப் பணிகளில் ஈடுபடும் விவசாயத் தொழிலாளர் களுக்கு 1948 குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின்படி கடந்த 5 ஆண்டுகளாக கூலி உயர்த்தப்படவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அனைத்தும் தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில் விவசாயத் தொழிலாளர்கள் கடுமையான சிரமத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலியை ரூ.600-ஆக வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் குடும்பத்திற்கு 100 நாள் வேலையும், அரசு சட்டக்கூலி ரூ.281-ஐ குறைக்காமல் வழங்கவும், திமுக தனது தேர்தல் வாக்குறுதியின்படி 150 வேலை வழங்க வேண்டும்.

நகர்புறங்களோடு இணைக்கப்பட்ட கிராமங்களில்  வேலையின்மை தொடர்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசு 2021-ல் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடுசெய்து நகர்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக செயல்படுத்தியது. இது நகர்புற மக்களுக்கு ஆறுதலாக அமைந்தது. ஆனால், 2022-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே, வரும் நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்து திட்டத்தை முழுமையாக அமுலாக்கம் செய்திட வேண்டும்.

விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு என தனித்துறையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 16 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
அ.பழனிச்சாமி, எம்.சின்னதுரை,  வீ.அமிர்தலிங்கம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top