Close
நவம்பர் 22, 2024 2:54 மணி

சிவகங்கை மாவட்டத்தில ஆதாருடன் வாக்காளர் அட்டை இணைக்கும் முகாம் பிப்.11 -ல் நடைபெறுகிறது

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு முகாம் நடைபெறுகி்றது

சிவகங்கை  மாவட்டத்தில் 11.02.2023 (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர் களிடமிருந்து ஆதார் எண்ணை பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுஆதார் எண் விவரங்கள் படிவம்-6-பி-ல் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் பெற்று வருகின்றனர்.

இந்த வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் போதிய முன்னேற்றம் காணப்படாததால், பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக  11.02.2023 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மாலை 00 வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் வாக்குச் சாவடி மையத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை படிவம் 6-பி இணைத்துக் கொள்ளலாம்.

மேலும், ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள், படிவம்-6பி-ல் குறிப்பிடப்பட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை அளித்து அட்டையுடன் இணைக்கலாம். எனவே, இந்த அறிய வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top