Close
நவம்பர் 22, 2024 11:36 காலை

கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் கொத்தடிமை தொழிலாளர் விழிப்புணர்வு தின உறுதி ஏற்பு

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றிய ஆணைவிழுந்தான் கேணி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் கொத்தடிமை தொழிலாளர் விழிப்புணர்வு நாள் உறுதி ஏற்ற மாணவர்கள்

கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் கொத்தடிமை தொழிலாளர் விழிப்புணர்வு தின உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் வழிகாட்டுதலின் படியும், புதுக்கோட்டை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சி.சுவாமி முத்தழகன், கந்தர்வகோட்டை வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஆ.வெங்கடேஸ்வரி, ந.நரசிம்மன், வட்டார வள மைய மேற் பார்வையாளர் கு.பிரகாஷ் ஆகியோரின் ஆலோசனை யின் படியும், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செம்மையாகச் செயல்பட்டு வருகிறது.

கந்தர்வகோட்டை ஒன்றிய ஆணைவிழுந்தான்கேணி இல்லம் தேடிக்கல்வி மையத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு நாளை  முன்னிட்டு விழிப்புணர்வு உறுதி ஏற்றுக்கொள்ளப் பட்டது.

மையத்தை பார்வையிட்டு இல்லம் தேடிக் கல்வி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அ.ரகமதுல்லா கொத்தடிமை தொழிலாளர்  நாள்  குறித்து பேசியதாவது: கொத்தடிமை முறையை ஒழிப்பதற்காக இந்தியாவில் 1976 -இல் சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

மாணவர்கள் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு நாள்  குறித்த விழிப்புணர்வை இந்த நாளில்  அறிந்து கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் மாணவர்கள் ஒராண்டு இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் சிறப்பான முறையில் பயின்று வருகின்றனர்.மாணவர்கள் தொடர்ச்சியாக இல்லம் தேடிக் கல்வி மையத்திற்கு வருகை புரிய வேண்டும்.

எண்ணும், எழுத்தும் திட்டத்தில் தொடக்க நிலை மாணவர்களுக்கு அவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்தும், மாணவர்களின் வருகை பதிவை இல்லம் தேடிக் கல்வி மைய செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.  தங்களுடைய படைப்புகளை இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களுக்கான வெளிவரும் தொடுவானம் இதழுக்கும்  அனுப்ப வேண்டும்

மாணவர்கள் வாசித்தல், கதை, விளையாட்டு, பாடல்கள் மற்றும் எளிய அறிவியல் செயல்பாடுகள் மூலம் கற்று வருவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது என்றார் ரகமத்துல்லா. நிகழ்வில் தன்னார்வலர்கள் மாலதி, தனலெட்சுமி , அகிலாண்டேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top