Close
செப்டம்பர் 20, 2024 3:54 காலை

புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு பயிற்சி

புதுக்கோட்டை

அரிமளம் அருகே கீழப்பனையூர் கிராமத்தில் தங்கல் பயிற்சி திட்டத்தில் பங்கேற்ற புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள்

புதுக்கோட்டை அருகே புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில்  நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள்,  கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமப்புற தங்கல் பயிற்சி திட்டத்தின் கீழ்,  அரிமளம் ஒன்றியத்தில் தங்கி பயின்று வருகின்றனர்.

இந்த மாணவிகள்  அரிமளம் வேளாண் உதவி வேளாண் இயக்குனர் கே.பாண்டியை நேரில் சந்தித்து கலந்துரையாடல் நடத்தி  அந்த கிராமத்தில் உள்ள நன்செய், புன்செய் நிலங்கள், சிறு, குறு விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும்   விவசாயிகளுக்கான  பல்வேறு திட்டங்கள் மற்றும் பயன்கள் குறித்து  அறிந்து கொண்டனர்.

மேலும்,  விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் காப்பீடு திட்டங்கள் பற்றியும், பின்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் அரசு சார்ந்த நலன் திட்டங்கள் பற்றியும் விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வில், மாணவிகள் ஜான்சி, ஜெயந்தி, ஜிம்சிரேச்சல், கமலபிரியா, ஜெ. காவியா. மற்றும் ம.காவியா, கார்த்திகா, கீர்த்தனா, வெ. கிருத்திகா, க. கிருத்திகா, பாரதி ஆகியோர்  கலந்து கொண்டனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top