Close
செப்டம்பர் 20, 2024 3:35 காலை

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்துக்கு அமைச்சர் மெய்யநாதன் நிதியுதவி

புதுக்கோட்டை

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே பிலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுமிகளின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்து நிவாரண நிதி வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டம், பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர்களது குடும்பத்தினரிடம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகள் காவிரி ஆற்றில் எதிர்பாராத விதமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மாணவிகளின் குடும்பத்தினரிடம்  (17.02.2023) நேரில் சென்று ஆறுதல்கூறி, தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.1 இலட்சம் வீதம் ரூ.4 இலட்சம் மதிப்பிலான உதவித்தொகைகளை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த, வெள்ளைச்சாமி மகள் சோபியா (7ம் வகுப்பு), ராஜ்குமார் மகள் தமிழரசி (8ம் வகுப்பு), மோகன்குமார் மகள் இனியா (6ம் வகுப்பு) மற்றும் பெரியண்ணன் மகள் லாவண்யா (6ம் வகுப்பு) ஆகிய 4 மாணவிகள் 15.02.2023 அன்று காவிரி ஆற்றில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தனர்.

அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இறந்த குழந்தைகளின் குடும்பத்தாருக்கு, இரங்கல் தெரிவித்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.2 இலட்சம் வீதம் ரூ.8 இலட்சம் மதிப்பிலான உதவித் தொகைகளை, முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டதன் அடிப்படையில் 15.02.2023 அன்று வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று (17.02.2023)  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  இறந்த குழந்தைகளின் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் நேரடியாக சென்று குழந்தைகளின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, குடும்ப உறுப்பினர்களிடம் ஆறுதல் தெரிவித்தார்.மேலும் இறந்த குழந்தைகளின் ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.1 இலட்சம் வீதம் ரூ.4 இலட்சம் மதிப்பிலான உதவித்தொகைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, உதவித் திட்ட அலுவலர் தங்கமணி, வட்டாட்சியர் வெள்ளைச்சாமி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) சுவாமி முத்தழகு, ஒன்றிய குழு உறுப்பினர் மு.பி.ம.சத்தியசீலன், பள்ளி துணை ஆய்வாளர் வேலுச்சாமி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top