புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு, கலை விருதுகள் மற்றும் காசோலைகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், கலை பண்பாட்டுத் துறையின் சார்பில், வயது மற்றும் கலைப் புலமைக்கு ஏற்றவாறு, 30 கலைஞர்களுக்கு கலை விருதுகள் மற்றும் காசோலைகளை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு (17.02.2023) வழங்கினார்.
தமிழ்நாட்டின் கலைப்பண்புகளை மேம்படுத்தவும் மற்றும் பாதுகாக்கும் நோக்கில் கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையில், கலை பண்பாட்டுத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக, தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 5 கலைஞர் களுக்கு 2002 – 2003 ஆம் ஆண்டு முதல் வயது மற்றும் கலைப் புலமைக்கு ஏற்றவாறு கலை விருதுகள் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.
2021-2022 ஆம் ஆண்டுகளுக்கு கலை விருதுகள் கலை பண்பாட்டுத்துறையின்கீழ் இயங்கி வரும், புதுக்கோட்டை மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் இயல், இசை மற்றும் நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டக் கலைகளில் சிறந்து விளங்கும் 5 கலைஞர்களுக்கு வயது மற்றும் கலைப் புலமை அடிப்படையில் விருதுகள் வழங்கிட மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் தேர்வாளர்குழு 15.07.2022 அன்று கூட்டப்பட்டு, கலை இளமணி விருதிற்கு சிலம்பக் கலைஞர் க.யாழினி.
குரலிசை கலைஞர் பா.கனிஷ்கா, சிலம்பக் கலைஞர் ஸ்ரீதேவி, ஓவியக் கலைஞர் மோ.விக்னேஷ், கலை வளர்மணி விருதிற்கு கிராமிய நடனக் கலைஞர் க.வர்ஷா, குரலிசை கலைஞர் வி.மாணிக்கநந்தினி, நாட்டுப்புறப் பாடகி ரா.லெட்சுமி, கலைச்சுடர்மணி விருதிற்கு குரலிசை கலைஞர் பா.சௌம்யா, பரத நாட்டிய கலைஞர் ந.குமார்.
தவில் கலைஞர் பி.குமார், கலை நன்மணி விருதிற்கு நாதஸ்வர கலைஞர் சி.ரவிச்சந்திரன், நாட்டுப்புற பாடகர் த.ரெங்கநாதன், ஆர்மோனியக் கலைஞர் மு.முருகேசன், கலை முதுமணி விருதிற்கு ஓவியக் கலைஞர் எஸ்.ராகவேந்திரன், நாடக கலைஞர் த.அமீர் பி.வி (எ) ஸ்ரீதேவி, ஓவியக் கலைஞர் இராம.சேதுராமன் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
2022-2023 ஆம் ஆண்டுகளுக்கு விருதுகள் வழங்கிட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தேர்வாளர்குழு 10.02.2023 அன்று கூட்டப்பட்டு கலைஇளமணி விருதிற்கு ஓவியக் கலைஞர் மோ.விக்னேஷ், சிலம்பக் கலைஞர் ச.ஷார்மி, குரலிசை கலைஞர் ஆஸ்ரீநிதி, கலை வளர்மணி விருதிற்கு நாதஸ்வர கலைஞர் க.மனோ, காளியாட்டம் கோ.ராஜசேகர், பரத நாட்டிய கலைஞர் ம.வசந்தாதேவி.
கலைச்சுடர்மணி விருதிற்கு பாடகர் மா.சக்திவேல், இயற்தமிழ் கலைஞர் சு.பீர்முகமது, தவில் கலைஞர் ஆ.முனியப்பா, கலை நன்மணி விருதிற்கு நாட்டுப்புற பாடகர் ப.முருகையா, பம்பைக் கலைஞர் வி.ஆர்.கணேசன், நாடகக் கலைஞர் எம்.ஆர்.பத்மா தேவி(எ) பாத்திமாபீவி, கலை முதுமணி விருதிற்கு நாடகக் கலைஞர் வீ.ராமையா(எ) ராமராஜன், ஓவியக் கலைஞர் ஆர்.ஆர்.சுப்பு, நாதஸ்வர கலைஞர் வி.பி.தேசபந்து ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில், திருச்சிராப்பள்ளி மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் திரு.சி.நீலமேகன், புதுக்கோட்டை மாவட்ட அரசு இசைப் பள்ளி தலைமையாசிரியர் கோ.மா.சிவஞானவதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.