Close
செப்டம்பர் 20, 2024 3:49 காலை

திமுக தலைவர் கருணாநிதியின் பேனா குறித்து பேச சீமானுக்கு தகுதி இல்லை

புதுக்கோட்டை

தென்காசி அருகே நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலர்

திமுக தலைவர் கருணாநிதியின் பேனா குறித்து பேச சீமானுக்கு தகுதி இல்லை என்றார் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவ. பத்மநாதன்.

தென்காசி மாவட்டம், பொட்டல் புதூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்துக்கு தலைமை வகித்து  அவர் மேலும் பேசியதாவது: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலில் கலைஞரின் பேனா சிலை நிறுவப்பட்டால், அதனை உடைப்பேன் என்று பேசியுள்ளார்.  கலைஞரின் பேனா செய்தது என்ன என்பது குறித்து பொதுக்கூட்டம் நடத்தினால் நன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

எந்த செயலையும் முந்தி செய்யும் நமது தென்காசி மாவட்டம்.  இந்த கூட்டத்தைத் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் முதல் கூட்டமாக  இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இங்கு வந்திருக்கும் மகளிரை பார்க்கும் பொழுது இது பொதுக்கூட்டமா அல்லது மாநாடா என்ற அளவிற்கு சிறப்பாக செய்திருக்கிறார்கள்.  இந்த நிகழ்ச்சியை தடுப்பதற்காக பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டது. அதையும் தாண்டி இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சீமான் நாடார் சமூகத்தைச் சார்ந்தவர். என் தாத்தா அவர்களது அப்பா பனை ஏறினார்கள். அதேபோல் சீமானின் தந்தையும் பனையேறி இருப்பார்.தலைவர் கருணாநிதி, அண்ணா, பெரியார் இவர்கள் இல்லை என்றால் சீமானும் தற்போது  பனையேறிக்கொண்டுதான் இருந்திருப்பார்.

நாங்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, என்ற கட்டுப்பாட் டோடு இருப்பவர்கள். இன்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் அமைதியாக இருக்கின்றோம். கலைஞருக்கு ஒரு இழுக்கு என்று சொன்னால் திமுக தொண்டர்கள் உயிரை விடவும் தயங்க மாட்டார்கள்.

எங்கள் தலைவரின் ஒரு வார்த்தைக் காக கட்டுப்பட்டு இருக்கின்றோம். சீமான் அவர்களே நீங்கள் எங்கள் தலைவரைப் பற்றி பேசினால் நன்றாக இருக்காது. வேறு எந்தத் தலைவரைப் பற்றி என்னவேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள்.  ஒன்றிய அரசின் கைக்கூலியாக இருக்கின்ற சீமான், எங்கள் தலைவரைப் பற்றி பேச எந்த தகுதியும் அருகதையும் இல்லை. என்பதை சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம் .

இங்கு கடையம் அருகே உள்ள கருத்தபுலியூரில் இரண்டு பேரை கரடி கடித்து படுகாயத்தை ஏற்படுத்தியது. திமுக மாவட்ட செயலாளர் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். அதிமுகவை சார்ந்த முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தீர்கள்? பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் தான் வழங்க முடியும் என்று அரசு விதி. அதுதான் சட்டம். ஆனால் அதிகமாக பாதிப்படைந்ததினால் இறந்தவர்களுக்கு என்ன நிதி வழங்க முடியுமோ அதை வழங்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தோம்.

அதனைத் தொடர்ந்து ரூ 5 லட்சம் வரை அரசிடமிருந்து பெற்றுக் கொடுத்துள்ளோம். இந்நிலையில் பாதிப்படைந்த வரின் பெண் என்னை சந்தித்து உங்கள் குடும்பத்தில் தகுதியுள்ள ஏதேனும் ஒரு நபருக்கு அரசு வேலை பெற்று தாருங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் – ஐ சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். அவரும் இது புதிய மாவட்டம் என்பதால் இங்கு அதிகமான வேலை வாய்ப்புகள் உள்ளது. நான் இதை அரசுக்கு பரிந்துரை செய்கின்றேன் என்று தெரிவித்தார். இருப்பினும் எனது சொந்த செலவில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அரசு வேலை கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளோம்.

அதேபோல் இப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டம். இங்கு விவசாயம் தான் பிரதான தொழிலாக உள்ளது. ஆனால் காட்டுப்பன்றிகள் பயிர்களை தாக்கி சேதப்படுத்துகிறது.

இதுகுறித்து விவசாயிகள் எங்களிடம் தெரிவித்தனர். பல்வேறு மாவட்டங்களில் காட்டுப்பன்றியை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நமது மாவட்டத்திற்கும் நீக்க  வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக அரசுக்கு மனு அளித்துள்ளோம். மேலும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்து உள்ளோம் இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்துக்கான ஏற்பாட்டினை ஒன்றிய செயலாளர் ஜெயகுமார் செய்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top