Close
நவம்பர் 22, 2024 9:08 மணி

புதுகை அரசு மன்னர் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கு

புதுக்கோட்டை

புதுகை மன்னர் கல்லூரியில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்ற வெளிநாட்டு வாழ் இந்தியரான காத்தமுத்து ராஜேந்திரனுக்கு சால்வை அணிவித்த பேராசிரியர்கள்

புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் திருச்செல்வம் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக  இக்கல்லூரியின் முன்னாள் மாணவரும், அமெரிக்காவில் உள்ள ஐ-ஒர்க்ஸ் நிறுவனத்தின்  மூத்த துணைத்தலைவருமான  காத்தமுத்து ராஜேந்திரன் பங்கேற்று  BIG DATA  ANALYTICS (பெரிய தரவு பகுப்பாய்வு)  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில், டேட்டா-வின் பயன்பாடுகள், அவை எப்படி எல்லாம் திரட்டப்படுகின்றன. அப்படி திரட்டப்பட்ட டேட்டா -க்கள்  எந்தெந்த வகைகளில்  பயன் படுத்தப்படுகின்றன என்பதனை பல்வேறு சமீபத்திய எடுத்துக் காட்டுகளுடன் விளக்கமளித்தார். மேலும், இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் மாணவர்கள் வேலை வாய்ப்புகளை எப்படி பெறுவது  என்பது குறித்த வழிமுறைகளையும் எடுத்துக் கூறினார்.

முன்னதாக கணினித்துறைத் தலைவர் எஸ். ரவிச்சந்திரன் வரவேற்றார். நிறைவாக முனைவர் அ.மலர்விழி நன்றி கூறினார். இக்கருத்தரங்கில், கணினி அறிவியல் துறை மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கணேசன், முத்துராமன் உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top