Close
செப்டம்பர் 20, 2024 6:44 காலை

இல்லம் தேடிக் கல்வி மைய தொடக்க நிலை தன்னார்வலருக்கு எண்ணும் எழுத்தும் குறைதீர் கற்பித்தல் பயிற்சி

புதுக்கோட்டை

புதுநகர், வட்டார வள மையம் ,வேலாடிப்பட்டி,அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய குறுவள மையங்களில் நடைபெற்றது.

கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி மைய தொடக்க நிலை தன்னார்வலருக்கு எண்ணும் எழுத்தும் குறைதீர் கற்பித்தல் பயிற்சி.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் வழிக்காட்டலில் கந்தர்வகோட்டை ஒன்றிய தொடக்க நிலை இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலருக்கு எண்ணும் எழுத்தும் குறைதீர் கற்பித்தல் பயிற்சி புதுநகர், வட்டார வள மையம் ,வேலாடிப்பட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய குறுவள மையங்களில் நடைபெற்றது.

வட்டார வள மையத்தில் நடைபெற்ற பயிற்சியை மேற்பார்வையாளர் (பொ) பிரகாஷ் தொடக்கி வைத்தார். தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சியாக குறைதீர் கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் தமிழ், ஆங்கிலம் கணிதம் ஆகிய பாடங்களில் தமிழில் எகர வரிசை முதல் ஏகார வரிசை வரையும், ஆங்கிலத்தில் வார்த்தைகள் உச்சரிப்பு, கணிதத்தில் ஒற்றை எண், இரட்டை எண்உள்ளிட்டவை குறித்து தொடக்க நிலை தன்னார்வலருக்கு 7 -ஆம்  கட்ட பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும் குழந்தை மைய கற்றலை சிறப்பாக எடுத்துச் செல்லவும், சிறார் குறும்படங்கள் தயார் செய்து மாணவர் களின் படைப்பாற்றலை ஊக்க படுத்த வேண்டும்.

மாணவர்களின் கற்றல் இடைவெளியை போக்கவும், மொழி மற்றும் கணித பாடங்களின் அடிப்படை திறன்களை மதிப்பீடு செய்யும் வகையிலும், தன்னார்வலர்கள் மாணவர்களின் அடிப்படை திறன்கள், தினசரி வருகை பதிவை இல்லம் தேடிக் கல்வி செயலியில் பதிவு செய்தல் சார்ந்த பணிகளை சிறப்பாக செய்ய வேண்டுமென வலியுறுத்தி  கூறப்பட்டது.

மேலும், தன்னார்வலருக்கான கையோடு, அடைவுத் திறன் அட்டவணைகள் வழங்கப்பட்டன.

இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் அ. ரகமதுல்லா பயிற்சியை ஒருங்கிணைத்தார்கள். இப்பயிற்சியில் கருத்தாளராக ஆசிரியர் பயிற்றுநர்கள் பாரதிதாசன், ராஜேஸ்வரி, தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி, அப்துல் ஹமீது,சின்னராசா,  ஆசிரியர்கள் அமுதா, நிவின், கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top