Close
நவம்பர் 22, 2024 6:10 மணி

அன்னவாசல் அருகே மீன் பிடித்தல் பயிற்சி பெற்ற புஷ்கரம் கல்லூரி மாணவிகள்

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே பரம்பூர் மீன்பண்ணையில் பயிற்சி பெற்ற புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவர்கள்

புதுக்கோட்டை அருகே  திருவரங்குளத்தில் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில்  நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள்,  கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமப்புற தங்கல் பயிற்சி திட்டத்தின் கீழ்,  அன்னவாசல் ஒன்றியத்தில் தங்கி பயின்று வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்துக்குள்பட்ட பரம்பூர் ஊராட்சியைச் சார்ந்த  விவசாயி பொன்னையா என்பவர் அமைத்துள்ள   மீன் பண்ணையில் பயிற்சி பெற்றனர்.

மாணவிகளுக்கு  மீன் வளர்ப்பு பற்றியும், நெல் வயலில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் கீழ்  மீன் வளர்ப்பதால் கிடைக்கும் பயன்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும் அங்கு வளர்க்கப்படும் மீன்களுக்கு பச்சைப் பாசி உரமிடுதல் குறித்தும் விளக்கினார். அங்குள்ள நிலத்தில் மாணவர் கள் டிராக்டர் மூலம் எவ்வாறு உழவு செய்ய வேண்டும் என்பது குறித்தும்,  மீன் பிடித் தொழில் நுட்பங்கள் பற்றியும்  பயிற்சி பெற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top