Close
நவம்பர் 22, 2024 5:37 காலை

தஞ்சை மாவட்டத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் சிறப்பு மருத்துவ முகாம்கள்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பு இணைந்து நடத்தும் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்து பார்வையிட்டார்

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவில் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பு இணைந்து நடத்தும் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று  துவக்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் மூன்று கட்டமாக நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி முதல் கட்டமாக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவில் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பு இணைந்து நடத்தும் சிறப்பு மருத்துவ முகாம்  தொடங்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பு மருத்துவ முகாமில் சிறுநீரப்பைப் பாதிப்பு தொடர்பான நவீன சிகிச்சை. ரத்த வகை கண்டறிதல், கண் மற்றும் பல் பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும் தகுந்த ஆலோசர்களால் மறுவாழ்வு குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 40 பேர் பயனடைந்தனர்.

படுக்கை புண்ணால் பாதிக்கப்பட்ட 2 பேர் உடனிடியாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும், 3 பேருக்கு தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்தச் சிறப்பு மருத்துவ முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை, மூளை நரம்பியல் மருத்துவம் மற்றும் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை ஆகியவற்றிற்கு சிறப்பு நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதே போஸ், இரண்டாம் கட்டமாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மார்ச் 9 ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மார்ச் 23 ஆம் தேதியும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக் கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

எனவே இந்த சிறப்பு மருத்துவ முகாமில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டு  பயன் பெறலாம்  என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  தெரிவித்தார்.

இந்த முகாமில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.எஸ், நமச்சிவாயம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் என். சுவாமிநாதன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் மரு. ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் மரு. முகமது இத்திரிஸ்,

இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவர் வி. வரதராஜன், பொருளாளர் எஸ். முத்துக்குமார், தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பின் மாநிலத் தலைவர் திரு.ஏ. கருணாகரன், தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பின் மாவட்டத் தலைவர் சி. ஜெயராஜ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் .எஸ். சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top