நம்பியூர் திட்டமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது .
விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஈ. தமிழ்மணி (முழுக்கூடுதல் பொறுப்பு )தலைமை வகித்தார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வ . கிருஷ்ணன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார் .
அவர் தனது உரையில், கல்வியின் இன்றியமையாமை குறித்தும் ,கல்வி தான் அறியாமையை நீக்கி அறிவை வளர்த்து சமூகம் உயர்த்தும் சிறந்த கருவி என்பது குறித்தும் சிறப்பான முறையில் உரையாற்றினார். மேலும் பட்டங்கள் பெற்ற மாணவர்களை வாழ்த்தினார்.
2017 மற்றும் 2018 -ஆம் கல்வியாண்டுகளில் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த ஐந்து துறைகளின் 241 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். தமிழ்த்துறையின் துறைத்தலைவர் முனைவர் அ.வ யூனஸ்(பொறுப்பு), ஆங்கிலத்துறையின் துறைத்தலைவர் முனைவர் ஈ . தமிழ்மணி (பொறுப்பு ).
கணிதவியல் துறையின் துறைத்தலைவர் முனைவர் ஈ . தமிழ்மணி, கணினி அறிவியல் துறையின் துறைத்தலைவர் த .வரதராஜன், வணிகவியல் துறையின் துறைத்தலைவர் முனைவர் ஆ . நாகேந்திரன் உள்பட எட்டுத் துறையின் கெளரவ விரிவுரையாளர்களும் , உதவிப் பேராசிரியர்களும் பங்கேற்றனர். விழாவில் பட்டங்கள் பெற்ற அனைத்துத் துறை மாணவர்களும் மனமகிழ்ச்சியோடு பட்டங்கள் பெற்றனர்.