Close
செப்டம்பர் 20, 2024 4:03 காலை

புதுக்கோட்டை மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை சார்பில் அறங்காவலர் குழுத்தலைவர், உறுப்பினர்கள் பதவி ஏற்பு

புதுக்கோட்டை

சட்ட அமைச்சர் ரகுபதி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்ட கோயில் அறங்காவலர்கள் குழு நிர்வாகிகள்

புதுக்கோட்டை மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை சார்பில் அறங்காவலர்கள் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூர், மஹாராஜபுரம், கனகம்மன் திருமண மண்டபத்தில், இந்துசமய அறநிலை யத்துறை சார்பில்  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், அறங்காவலர்கள் குழுத் தலைவராக  தவ.பாஞ்சாலன்  மற்றும் உறுப்பினர் களாக க.முருகேசன் , சுப.துரை ராஜா , லோ.வளர்மதி, கமலா செல்வம்  ஆகியோர் (26.02.2023) பதவியேற்றுக் கொண்டனர்.

பின்னர் சட்ட அமைச்சர் தெரிவித்ததாவது:  தமிழ்நாடு முதலமைச்சர் அனைவரும் சமம் என்ற திராவிட மாடலின்கீழ் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி திருக்கோயில்களில் நடைபெறும் பணிகளை முறையாக மேற்கொள்ளும் வகையில், இந்துசமய அறநிலையத்துறையின் நெறிமுறைகளின்படி சமய அறநிறுவனங்கள் தவிர மற்ற சமய அறநிறுவனங்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்திட அறிவுறுத்தப் பட்டுள்ளது.

அதன்படி, இன்றையதினம் மாவட்ட அறங்காவலர்கள் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுள்ளனர். எம்மதமும் சம்மதம் என்ற திராவிட மாடலின்கீழ் எந்த மதத்தினருக்கும் எதிரானவர்களாக இல்லாமல் அண்ணன், தம்பியாக அனைவரும் பழகி வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர்  ஆணையின்படி மக்களுக்குத் தேவையான வசதிகளை இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 2000 கோயில்களில் ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு, எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் கோயில்களில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும் ஆதிதிராவிடர் மற்றும் கிராம கோயில்களில் ரூ.2000 வீதம் கோயில்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. விராலிமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பில், அரசு கலைக் கல்லூரி ஏற்படுத்திடவும், நார்த்தாமலை மற்றும் திருவப்பூரில் பக்தர்களுக்கு பயன்படும் வகையில் திருமண மண்டபங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

எனவே இன்று பதவியேற்றுள்ள அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும்  தமிழ்நாடு முதலமைச்சரால் இந்துசமய அறநிலையத் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார்   சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் .மா.செல்வி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைப்பித்தன், ஒன்றிய குழுத் தலைவர்கள் மேகலா முத்து (அரிமளம்), பாண்டிசெல்விகே.ஆர்.என்.போஸ், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்ற துணைத் தலைவர்  எம்.லியாகத்அலி, இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர்  எம்.சூரியநாராயணன், உதவி ஆணையர் அனிதா, செயல் அலுவலர் முத்துராமன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top