Close
செப்டம்பர் 20, 2024 3:36 காலை

நுகர்பொருள்வாணிபக்கழகத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து மார்ச் 9-ல் ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற ஏஐடியூசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசுகிறார், மாநில பொதுச்செயலர் சந்திரகுமார்

நுகர் பொருள் வாணிப கழகம் தனியார் மயமாக்கலை கைவிடுவது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 9 -ல் ஆயிரம் இடங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்வதென நுகர்பொருள் வாணிபக்கழக ஏஐடியூசி மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஏஐடியூசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநில நிர்வாகக் குழு கூட்டம் தஞ்சாவூர் தொழிற்சங்க அலுவலக கூட்ட அரங்கில்  மாநில தலைவர் அ. சாமிகண்ணு, நாகை மாவட்ட செயலாளர் பி. ஆனந்தன் தலைமையில் (பிப் 27 -ல்)   நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார் தலைமை வகித்து, நடைபெற்ற பணிகள் மற்றும் சென்னை யில் நடைபெற்ற அனைத்து சங்க கூட்டு நடவடிக்கை குழு கூட்ட முடிவுகள் பற்றி விளக்கி பேசினார்.

கூட்டத்தில் பொருளாளர் டி. கோவிந்தராஜன் , இணை பொது செயலாளர் ஜே. குணசேகரன், மாநில செயலாளர்கள் எம். எஸ். கிருஷ்ணன், கே.எஸ். முருகேசன், எம் கலியபெருமாள் திருவாரூர் மாவட்ட செயலாளர் ஆர். செல்வம்,. மாவட்ட தலைவர் வி. கணேசன், ஜி.வேலாயுதம்,. நாகை மாவட்ட செயலாளர் ரவி , பேராவூரணி சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் கூட்டத்தில், நெல் கொள் முதலில் நடைபெறுகின்ற ஊழல் முறைகேடுகளை களைய, தமிழ்நாடு அரசு மேலிருந்து நடவடிக்கையை தொடங்க வேண்டும், ஊழலுக்கு அடிப்படை யான காரணங்களாகிய கண்மூடித்தனமான எடை இழப்புத் தொகையை வசூலிப்பது, ஆயிரக்கணக்கில் லாரி மாமூல், கொள்முதல் அலுவலர்கள் முதற்கொண்டு உயர் அதிகாரிகள் வரை மூட்டைக்கு இவ்வளவு ரூபாய் பணம் பெறுவது ஆகிய காரணங்கள் ஊழலில் பெரும் அளவு பங்கு வைக்கிறது.

கொள்முதல் பணியாளர்கள் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை உடனுக்குடன் அதிகாரிகள் இயக்கம் செய்யாததால் சுமார் 18 கோடி ரூபாய் இரண்டு ஆண்டுகளில் டெல்டா மாவட்டங்களில் சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்டுள்ளது .

சில ஆயிரங்கள் சம்பளம் பெறுகின்ற ஊழியர்களிடம் லட்சக்கணக்கில் சட்ட விரோதமாக ரெக்கவரி வசூலிக்கின்ற முதுநிலை மண்டல மேலாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொண்டு இந்த முறையை தடுத்து நிறுத்தப்பட வேண்டும், தற்போது கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதை

உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும், ஈரப்பத தளர்வு கோரி தமிழ் நாடு அரசு ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி, காலதாமதம் செய்து அறிவிக்கப்பட்ட ஈரப்பதம் தளர்வு எந்தவிதத்திலும் விவசாயிகளுக்கு பலனளிக்காது,

இனிவரும் காலங்களில் முன்கூட்டியே அறிவிப்பு செய்ய வேண்டும், சுமை தூக்கும் தொழிலாளர் மற்றும் கொள்முதல் பணியாளர்களுக்கு வார விடுமுறை அன்று பணிபுரிவதற்கு இருமடங்கு சம்பளமும், தேசிய பண்டிகை விடுமுறை நாட்களில் பணி புரிந்தால் மும்மடங்கு சம்பளமும் சட்டப்படி வழங்க வேண்டும்.

நுகர்பொருள் வாணிபகழகம் தனியார் மயமாக்கல் நடவடிக்கை, நிர்வாக பரிந்துரையான கருணை ஓய்வூதியம் ரூபாய் 4000 ம் வழங்குவது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்து சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மார்ச் 9 -ஆம் தேதி ஆயிரம் இடங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top