புதுக்கோட்டை அரசு உயர் துவக்க பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கைவினைப் பொருட்கள் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கைவினைப் பொருட்கள் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதில் பள்ளி மாணவ மாணவிகள் பேப்பர், அட்டை பெட்டிகள், தேங்காய் மட்டை, சணல், ஐஸ் குச்சிகள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு போட்டோ பிரேம், காகிதம் மலர்கள், ஓலை பெட்டிகள், காற்றாலைகள், பள்ளி மாதிரி கட்டிடங்கள், வாக்கு இயந்திரங்கள், பேப்பர் பந்துகள், பேப்பர் வீடுகள் மற்றும் வீட்டு அலங்கார பொருட்கள் மற்றும் ஓவியங்கள் என 250 -க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்கள் மற்றும் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர். இதனை பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பார்வையிட்டனர்.
மாணவர்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தும் விதமாக அப்பள்ளியில் ஓய்வு பெற்ற ஆசிரியை புவனேஸ்வரி, மாணவ மாணவிகளுக்கு வேஸ்ட் பேப்பர் அட்டைப்பெட்டி உள்ளிட்ட பொருட்களை வைத்து எப்படி கைவினைப் பொருட்களை செய்வது குறித்து கற்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் நிகழ்ச்சிகள் தலைமை ஆசிரியர் சக்திவேல், பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் ரத்தினம், நகர் மன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மாரிக்கண்ணு, பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி சுந்தரம், ஆசிரியர் பேச்சியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.