Close
செப்டம்பர் 20, 2024 6:41 காலை

சொத்துவரி உயர்வைக் கண்டித்து சிபிஎம் கட்சியினர் முற்றுகைப் போராட்டம்

புதுக்கோட்டை

புதுகை நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

புதுக்கோட்டை நகராட்சியில் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி உயர்வைக் கண்டித்தும், வரி உயர்வை திரும்பப்பெறக் கோரியும் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட வீடு, வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட சொத்துவரிகளை நகராட்சி நிர்வாகம் வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தி யுள்ளது. கடந்த ஆண்டைவிட சுமார் 250 வரை வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், நகராட்சி நிர்வாகம் முறையாக வசூல் செய்வதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உயர்தப்பட்டுள்ள சொத்துவரி உயர்வைக் கண்டித்தும், உடனடியாக வரி உயர்வைத் திரும்பப்பெறக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.நாகராஜன், நகரக்குழு உறுப்பினர்கள் சி.அடைக்கலசாமி, கி.ஜெயபாலன், எம்.ஏ.ரகுமான், எஸ்.பாண்டியன், கணேஷ், நிரஞ்சானதேவி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மகாதீர் மற்றும் வசந்தகுமார், மகாலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து நகராட்சி பொறியாளர் சேகரன், கணேஷ்நகர் காவல் ஆய்வாளர் அப்துல்ரகுமான் ஆகியோர் கட்சி நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவரத்தையில் உயர்த்தப்பட்டுள்ள வரிவிதிப்பை பரிசீலனை செய்வதாகவும் அதிகமாக வரி விதிக்கப்பட்ட பயனாளிகள் புகார் மனு அளித்தால் பரிசீலனை செய்வதாகவும் அதிகாரிகள் உறுயளித்தனர்.

வரிவிதிப்புக்கு எதிரான பொதுமக்களின் கோரிக்கையை மாநில அரசுக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top