Close
செப்டம்பர் 20, 2024 7:07 காலை

காரல் மார்க்ஸையும், கம்யூனிஸ்டு களையும் தரக்குறைவாக பேசிய ஆளுநர் ரவியைக்கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

ஆளுநர் ரவியைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்

மாமேதை காரல் மார்க்ஸையும், கம்யூனிஸ்டுகளையும் தரக்குறைவாக பேசிய ஆளுநர் ரவியைக் கண்டித்து  இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தஞ்சையில் நடைபெற்றது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி, அரசியல் அமைப்புச் சட்டத்தை அலட்சியம் செய்தும், அத்துமீறியும், சிறுமைப் படுத்தியும் செயல்பட்டு வருவதை ஒட்டுமொத்த மக்களும் கண்டித்து வருகின்றனர்.அரசியலமைப்பு அதிகாரப் பொறுப்பில் இருந்து வரும் ஆளுநர், அரசியல் கட்சியின் சேவகராக செயல்பட்டு வருவது எதிர்மறை நடவடிக்கையாகும்.

அண்மைக் காலமாக கம்யூனிஸ்டுகள் மீதும், காரல் மார்க்ஸ் குறித்தும் விஷமத்தனமான கருத்துகளை தெரிவித்து ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டு வருகிறார். அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைப் பண்பான மதச்சார்பின் மையை தகர்த்து, இந்தியாவும் மதம் சார்ந்த நாடு தான் என பேசி வருகிறார்.

ஆளுநரின் நடவடிக்கை எல்லை மீறி சென்று தமிழ்நாட்டின் அமைதி நிலையை சீர்குலைத்து வருகிறது. ஆளுநரின் அத்துமீறல்களை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு அறிவிப்பையேற்று, தஞ்சை மாநகரக்குழு  சார்பில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பனகல் கட்டிடம்  தமிழ் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது .

ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் ஆர்.பிரபாகர், ஒன்றியக் குழு செயலாளர் க.ஜார்ஜ்துரை ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.ஆறுமுகம் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மூத்த தலைவர் ஜி.கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் என்.பாலசுப்பிர மணியன்,

நிர்வாக குழு உறுப்பினர் ம.விஜயலட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் பி.குணசேகரன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஆர்.கே.செல்வகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார் கள். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா ஆர்ப்பாட்டத்தினை நிறைவு செய்து உரையாற்றினார். முடிவில் மாநகர குழு உறுப்பினர் இரா.செந்தில்நாதன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top