Close
செப்டம்பர் 20, 2024 3:42 காலை

பகுதி நேர பயிற்சியாளர் பயிற்சி பணிக்கு குத்துச்சண்டை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை

பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய அளவில் பதக்கம் வென்ற குத்துசண்டை வீரர் / வீராங்கனை பகுதி நேர பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ)  மா.செல்வி  தகவல் தெரிவித்துள்ளார்.

விளையாடு இந்தியா மாவட்ட மையம், புதுக்கோட்டை- (SDAT-Khelo India District Centre- Pudukkottai) தேசிய அளவில் பதக்கம் வென்ற குத்துசண்டை வீரர் / வீராங்கனை பகுதி நேர பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் “விளையாடு இந்தியா” (Khelo India) திட்ட நிதியுதவியில் துவக்க நிலை குத்துச்சண்டை பயிற்சிக்கான “SDAT– விளையாடு இந்தியா மாவட்ட மையம்” புதுக்கோட்டை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் அமைக்கப்பட உள்ளது. இம்மையத்தில் 30-100 விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்குட்ப்பட்ட குத்துசண்டை வீரர் / வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும்.

சீனியர் தேசிய போட்டியில் பதக்கம் அல்லது கலந்து கொண்டவராகவோ, கேலோ இந்தியா போட்டிகளில் பதக்கம் அல்லது கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக ரூ.25,000 வழங்கப்படும். இது நிரந்தப் பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தர பணியோ கோர இயலாது.

இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் பெற்று  4.3.2023 -க்குள் நேரில் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவராக இருந்தால் 5.3.2023 தேதி காலை 7.00 மணிக்கு நேர்முகத் தேர்வு புதுக்கோட்டை மாவட்ட முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி விளையாட்டரங்கத்தில் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 7401703498 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top