Close
நவம்பர் 22, 2024 5:58 காலை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி… கோபியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினர்

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றியை கோபியில் இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுகவினர்

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் கடந்த மாதம் பிப்ரவரி மாதம் 27- ஆம் தேதி நடைபெற்ற நிலையில், (மார்ச்2) நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கி வாக்கு எண்ணிக்கை  நடைபெற்றது.

இத்தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில், காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வந்ததையும், இறுதியில் அவர் வெற்றி பெற்றதையும் கொண்டாடும் வகையில், கோபியில் நகர செயலாளர் என் ஆர் நாகராஜ் தலைமையில் திமுக கூட்டணியினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் விஜய் கருப்புசாமி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top