புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கான மென் திறன் வளர்ப்பு மற்றும் புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கான மென் திறன் வளர்ப்பு மற்றும் புத்தாக்க பயிற்சி முகாமுக்கு , கல்லூரி பொருளாளர் ஆர் எம் வீ கதிரேசன் தலைமை வகித்தார்.
செயலாளர் பி.கருப்பையா முன்னிலை வகித்தார். நிகழ்வில் . காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தளவாட மேலாண்மை துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் வீ. ஏ.ஆனந்த் மாணவர்களுக்குபயிற்சி அளித்தார்.
நிகழ்வில் மாநில அளவில் நடைபெற்ற தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர் களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜீவானந்தம், கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர். எம். இளங்கோவன் ஆகியோர் துறை பேராசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்வில் 200 -க்கும் மேற்பட்ட மாணவர்களும் அனைத்து துறை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக வேலைவாய்ப்பு அலுவலர் சரண்யாராமன் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக கல்லூரியின் விரிவுரையாளர் திருமலை அரசன் நன்றி கூறினார்.