புதுக்கோட்டையிலுள்ள முன்மாதிரி பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்ற தொடக்க விழா மற்றும் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 75 -ஆவது பவள விழா நிகழ்வு நடைபெற்றது.
புதுக்கோட்டை முன்மாதிரி அரசு மேல்நிலை ப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் தொடக்க விழா பள்ளி முதல்வர் பி. சிவப்பிரகாசம் விழாவினை தலைமையில்
நடைபெற்றது.
தொடக்க விழாவின்போது புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய ஒன்றியத்துடன் இணைந்த 75 வது ஆண்டு பவள விழாவினை சிறப்பிக்கும் வகையில் நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டது.
மன்றத்தை புதுக்கோட்டை தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் ஆ மணிகண்டன், மாமன்னர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் சா. விஸ்வநாதன் ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தின் தொல்லியல் சிறப்புகளையும் , புதுக்கோட்டை சமஸ்தானம் மக்களுக்கு செய்த முற்போக்கு திட்டங்களையும், நிர்வாக சிறப்புக ளையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
முன்னதாக பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் இயலரசன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் துணை முதல்வர் டி இன்பராஜ் மற்றும் முதுகலை வரலாற்று ஆசிரியர் ஆர்.பிரபு ஆகியோர் பேசினர். முடிவில் ஆசிரியர் மன்ற செயலர் எம்.சரவணன் நன்றி கூறினார்.