Close
செப்டம்பர் 20, 2024 4:14 காலை

அய்யா வைகுண்டர் 191-வது அவதாரத் திருநாளையொட்டி ஆகம ஊர்வலம்

சென்னை

சென்னை மணலியில் நடைபெற்ற அய்யா வைகுந்தர் ஊர்வலம்

அய்யா வைகுண்டர் 191-ஆவது அவதாரத் திருநாளையொட்டி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற அகிலத் திரட்டு ஆகம ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு என்ற ஊரில் அவதரித்தவர் அய்யா வைகுண்டர். அகிலத் திரட்டு அம்மா னை என்ற புனித நூலை இயற்றி இறைவழி பணிகளை மேற்கொண்டு வந்தவர் அய்யா வைகுண்டர் ஆவார்.

அய்யா வைகுண்டரின் வழியைப் பின்பற்றும் வகையில் அவரது வழியைப் பின்பற்றும் தொண்டர்களின் உதவியுடன் மணலி புதுநகரில் அய்யா வைகுண்டருக்கு ராஜகோபுரத்துடன் கூடிய வைகுண்ட தர்மபதி செயல்பட்டு வருகிறது.

அய்யா வைகுண்டரின் 191-ஆவது அவதாரத் திருநாளை முன்னிட்டு அகிலத் திரட்டு ஆகம ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.  பழைய வண்ணாரப்பேட்டை ராமநாயக்கன் தெருவில் உள்ள தங்கக்கிளி திருமண மண்டபத்தில் பூஜைகள் முடிந்து காலை 6.30 மணிக்கு ஊர்வலம் தொடங்கியது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத் திரட்டு ஆகமம் வைக்கப்பட்டு ஊர்வலம் தொடங்கியது.

ஊர்வலத்தை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் ஏ.நாராயணன், லதா நாராயணன் தொடங்கி வைத்தனர்.

அப்போது சிவ, சிவ, ஹரஹர சிவ என பக்தர்கள் நாமக்கொடி ஏந்தி கோஷங்களை எழுப்பினர். வழி நெடுகிலும் பல்வேறு இடங்களில் நீர், மோர் வழங்கப்பட்டது. ஊர்வலத்தில் நடந்து சென்ற பக்தர்களுக்கு திருவொற்றியூர் டி.எஸ்.எஸ். நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தில் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப் பேட்டை, திருவொற்றியூர், எர்ணாவூர் வழியாக சுமார் 15 கி.மீ. தொலைவைக் கடந்து ஊர்வலம் மணலி புதுநகரில் அமைந்துள்ள வைகுண்டர் தர்மபதியை மதியம் சுமார் 1 மணிக்கு சென்றடைந்தது.

ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். பின்னர் வைகுண்டர் தர்மபதியில் பணிவிடை, உச்சி படிப்பு, அன்னதானம்,  ஊஞ்சல் சேவை, தாலாட்டு, சரவிளக்கு, அய்யா தொட்டில் வாகனத்தில் பதிவலம் வருதல், இனிமம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top