புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கீழப்பனையூர் கிராமத்தில் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் மாணவிகள் வயல்களில் எலிகளை அழிப்பது குறித்த செய்முறைகளை விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.
விவசாயிகளுக்கு அதில் ஒன்றாக எலி தடுப்பு வழி முறைகள் குறித்து மாணவிகள் கூறியதாவது: 1 ஏக்கர் நிலத்திற்கு 5 கிலோ ஸ்போர்ட்டை 15 கிலோ மணலில் கலந்து வரப்பைச் சுற்றி வீசிவிட்டால் நிலத்தில் உள்ள எலிகள் அந்த வாசனைக்கு ஓடி வரும் எலிகளை இதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
மேலும், வயலில் வரப்பைச் சுற்றி செண்டிப்பூவினை வெட்டிப் போட வேண்டும். எலிகளின் இனப்பெருக்க காலத்தில் எலி வலைகளை வெட்டி அழித்து விட வேண்டும்.(இனப்பெருக்க காலம்- ஜனவரி-மார்ச், செப்டம்பர்-அக்டோபர்). அதில், முதல் மூன்று நாட்களுக்கு அரிசிப் பொறியுடன் தேங்காய் எண்ணெய் கலந்து அத்துடன் விஷம் வைத்து விட வேண்டும்.
மேலும் எருக்கு, நொச்சி ஆகியவற்றை வரப்பு பயிராக வளர்த்து எலியினைக் கட்டுப்படுத்தலாம் என்று மாணவிகள் ஜான்சி, ஜெயந்தி,ஜிம்சி ரேச்சல், கமலப்பிரியா, கார்த்திகா, ஜெ, காவியா, மற்றும் கீர்த்தனா, வெ. கிருத்திகா, ம. காவியா, க. கிருத்திகா, பாரதி ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.