Close
நவம்பர் 22, 2024 10:25 காலை

மண் வளத்தை காக்கும் மூடாக்கு தொழில் நுட்பம் ! விவசாயிகளுக்கு புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி

புதுக்கோட்டை

மண்ணின் மேற்பரப்பின் ஒரு பகுதியில் அடுக்காக அமைக்கப்படும் மூடாக்கு தொழில் நுட்பம் குறித்து விளக்கமளிக்கும் புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவிகள்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கீழப்பனையூர் கிராமத்தில் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் மாணவிகள் வேளாண் செய்முறைகளை விவசாயிகளுக்கு எடுத்து கூறினர்.

அதில் ஒன்றாக மூடாக்கு செய்முறையாகும்.மூடாக்கு என்பது மண்ணின் மேற்பரப்பின் ஒரு பகுதியில் அடுக்காக அமைக்கப்படும் ஒரு பொருள் ஆகும்.மூடாக்கின் வகைகள் 1.தழை மூடாக்கு, 2.சருகு மூடாக்கு, 3.உயிர் மூடாக்கு, 4.கல் மூடாக்கு, 5.நெகிழி மூடாக்கு, 6.தூசி மூடாக்கு, 7.செங்குத்து மூடாக்கு.மூடாக்கு மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் மற்றும் வெப்பத்தை கட்டுப்படுத்தும்.மேலும் களைச் செடிகள் வளர்வதை மட்டுப்படுத்தும், நீர் ஆவியாதலை குறைக்கும் மற்றும் மண்ணுயிர்களுக்கும் கூடாரமாய் அமையும் என்று பயிற்சியளிக்கப்பட்டது.

பயிற்சியில், ஜான்சி,ஜெயந்தி, ஜிம்சி ரேச்சல், கமலப்பிரியா, கார்த்திகா, ஜெ .காவ்யா மற்றும் ம.காவ்யா ,கீர்த்தனா, வெ. கிருத்திகா,  க. கிருத்திகா, பாரதி ஆகியோர் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top