ஆர்.கே.நகருக்கு உள்பட்ட கொருக்குப்பேட்டையிலிருந்து வியாசர்பாடி, மூலக்கடை செல்லும் வழியில் எழில்நகர், நேருநகர் பகுதிகளில் பெரம்பூர்- தண்டையார்பேட்டை தடத்திலான ரயில் பாதை செல்கிறது. இவ்வழித் தடத்தில் அதிக அளவிலான சரக்கு ரயில்கள் தொடர்ச்சியாக சென்று வருகின்றன. இதனால் இரண்டு இடங்களிலும் ரயில்வே கேட் அமைக்கப்பட்டு அடிக்கடி போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
இதனால் தண்டையார்பேட்டையிலிருந்து கொருக்குப் பேட்டை, கொருக்குப் பேட்டையிலிருந்து வியாசர்பாடி, எம்.கே.பி. நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருவதில் மிகுந்த சிரமங்கள் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
மேலும் ஐ.ஓ.சி. நிறுவனத்தின் பெட்ரோலிய பொருள்கள் சேமிப்புக் கிடங்கும் இப்பகுதியில் இருந்து வருவதால் கனரக வாகனங்கள் உள்ளிட்டவைகளின் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருந்து வருகிறது. இதனால் எழில் நகர், நேரு நகர் ஆகிய இரண்டு இடங்களிலும் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ரூ.1.06 கோடியில் புதிய மேம்பாலம்: இதனையடுத்து எழில் நகர் பகுதியில் ரூ.1.06 கோடியில் மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்திருந்தது.
இதில் ரூ. 96 கோடி நிதியை சென்னை மாநகராட்சியும் ரூ. 10 கோடி நிதியை ரயில்வே அமைச்சகமும் ஒதுக்கீடு செய்துள் ளது. எழில் நகரில் ரூ.1.06 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார். அப்போது மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதன் மூலம் கடந்த தேர்தலின்போது மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது என உதயநிதி குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு, மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, ஆர்.கே.நகர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் ஜெ.ஜெ.எபினேசர், சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன் தீப்சிங் பேடி, தி.மு.க. மாவட்டச் செயலாளர் இளைய அருணா, மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் உள்ளிட்டோர்